MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அனோஷ்கா பிறந்த நாளில்... மகளுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஷாலினி அஜித்! வைரல் போட்டோஸ்!

அனோஷ்கா பிறந்த நாளில்... மகளுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஷாலினி அஜித்! வைரல் போட்டோஸ்!

ஷாலினி அஜித் தன்னுடைய மகள் அனோஷ்காவுக்கு பிறந்த நாளை முன்னிட்டு, முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Jan 03 2023, 10:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ் திரையுலகில் டாப் ஹீரோவாக இருக்கும் அஜித், தற்போது 'துணிவு' படத்தில்  நடித்து முடித்துள்ளார். இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், மூன்றாவது முறையாக அஜித் நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்களின், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி உள்ள நிலையில்.. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திரைக்கு வருகிறது.
 

26

எனவே இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த படத்தின் ட்ரைலர் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வெளியாகி, ஒரே நாளில் 20 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்ட சாதனையை படைத்தது.

'பாய்ஸ்' பட லுக்கில் ஜொலிக்கும் ஜெனிலியா! 20 வருட திரைப்பயணத்தை கணவர் ரித்தீஷ் தேஷ்முக்குடன் கொண்டாடிய போட்டோஸ
 

36

பொதுவாக நடிகர் அஜித், சோசியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்றாலும்.. இவருடைய மனைவி ஷாலினி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். மேலும் அவ்வபோது ரசிகர்கள் அதிகம் பார்த்திடாத தன்னுடைய குடும்ப புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
 

46

அந்த வகையில் அஜீத் தன்னுடைய குடும்பத்தோடு புத்தாண்டு கொண்டாடியபோது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை ஷாலினி பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படம் நேற்று வெளியாகி, மிகவும் வைரலாக பார்க்கப்பட்டது.

தளபதி விஜய் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டாரா? அடுத்த பார்ட்னர் இவரா.. விக்கி பீடியா தகவலால் பராரப்பு!
 

56

இதைத்தொடர்ந்து தன்னுடைய மகள் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள புகைப்படம் வேறு லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

66

ஹாப்பி பர்த்டே டார்லிங் என கேப்டன் போட்டு... ஷாலினி மகளைக் கட்டிப்பிடிக்கும் புகைப்படம் ஒன்றையும், அவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ரசிகர்களும் அனோஷ்காவுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விவாகரத்து பின் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அழகில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! லைக்குகளை குவிக்கும் போட்டோ!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
சந்தாவை திருமணம் செய்ய மறுக்கும் சேரன்... நிலாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
Ethirneechal: எதிர்நீச்சலில் மெகா ட்விஸ்ட்! கோலங்கள் நாயகியின் மிரட்டலான கம்பேக்! இனி ஆதி குணசேகரனுக்கு ஆப்பு கட்டாயம்.!
Recommended image3
அஜித்தை போலவே துபாயில் சிக்கிய முன்னணி தமிழ் நடிகர்! போர் பதற்றத்தின் நடுவே வெளியிட்ட உருக்கமான பதிவு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved