- Home
- Cinema
- Vijay Vs Ajith: வசூல் ரீதியாக தளபதியை தொட திண்டாடும் அஜித்; கடந்த 5 வருடத்தில் இதை நோட் பண்ணுனீங்களா?
Vijay Vs Ajith: வசூல் ரீதியாக தளபதியை தொட திண்டாடும் அஜித்; கடந்த 5 வருடத்தில் இதை நோட் பண்ணுனீங்களா?
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் அஜித் - விஜய் இடையே ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவி வந்தாலும், தளபதியின் வசூலை அஜித்தால் முறியடிக்க முடியவில்லை. கடந்த 5 வருடங்களில் அஜித் விஜய் நடிப்பில் வெளியான படங்கள் மற்றும் அதன் வசூலை பார்ப்போம்.

விஜய் மற்றும் அஜித் படங்களின் வசூல் குறித்த தகவல்
அஜித் - விஜய் என இருவருமே 90-களில் தான் இளம் ஹீரோவாக தங்களின் சினிமா கரியரை துவங்கினார்கள். இருவருமே, ஹீரோவாக நடிப்பதற்கு முன் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும், 1992-ஆம் ஆண்டு தளபதி விஜய் 'நாளைய தீர்ப்பு' படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நிலையில், அஜித் 1993-ஆம் ஆண்டு 'அமராவதி' படம் மூலம் ஹீரோயினாக மாறினார்.
அஜித் - அஜித்தின் அறிமுகம்
விஜய் தன்னுடைய அப்பாவின் சப்போர்ட் காரணமாக திரையுலகில் அறிமுகமானவர். ஆனால் அஜித் யாருடைய துணையும் இன்றி, சினிமாவில் கால் ஊன்றியவர். இது மட்டுமே இவர்களிடம் இருந்த மிகப்பெரிய வித்தியாசமாக இருந்தாலும், மற்றபடி இருவருமே தங்களின் விடாமுயற்சி காரணமாகவே தற்போது ரூ.100 கோடி ரூ.200 கோடி சம்பளம் பெரும் நடிகர்களாக வளர்ந்துள்ளனர்.
குட் பேட் அக்லி படத்துக்காக 25 ஆண்டுகளுக்கு பின் அஜித்துடன் இணையும் பிரபல ஹீரோயின்!
விஜய் - அஜித் சந்தித்த விமர்சனங்கள்
விஜய் - அஜித் இருவருக்குமே ஆரம்ப கால சினிமா வாழ்க்கை தோல்விகளும், வலிகளும், விமர்சனங்கள் நிறைந்த ஒன்றாகவே இருந்தது. நூற்றாண்டு கண்ட பத்திரிக்கை ஒன்று விஜயின் தோற்றத்தை விமர்சித்த விஷயம் இன்று வரை பேசப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. அதே போல் அஜித் சினிமா உலகில் நிலைக்க மாட்டார் என பத்திரிகையில் எழுதிய பேனாக்கணும் உண்டு. ஆனால் இருவருமே அதனை தகர்த்தெறிந்து, தரமான கதைகள் மூலம் தங்களை முன்னணி ஹீரோக்களாக நிலைநிறுத்த கொண்டார்கள்.
மாறி மாறி ஹிட் கொடுத்த நடிகர்கள்
இருவரும், 'ராஜாவின் பார்வையிலே' என்கிற படத்தில் இணைந்து நடித்த நிலையில் அந்த படம் தோல்வியை தழுவியது. இதன் பின்னர் மீண்டும் 'நேருக்கு நேர்' படத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருந்த நிலையில், ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து அஜித் விலகினார் .
ஆனால் அஜித் - விஜய் இருவருமே போட்டி போட்டு தங்களின் திரையுலக வாழ்க்கையில் வெற்றி கண்டனர் உதாரணத்துக்கு, 1996-ல் அஜித்துக்கு ஒரு 'காதல் கோட்டை' என்றால், விஜய்க்கு 'பூவே உனக்காக' ஹிட் கொடுத்தது. 1998-ல் அஜித்துக்கு அவள் வருவாளா ஹிட் கொடுத்தது போல், விஜய்க்கு அதே ஆண்டு 'பிரியமானவளே' வெறித்தனமான வெற்றியை பதிவு செய்தது. இதே போல் ஒவ்வொரு ஆண்டும் மாறி மாறி ஹிட் கொடுத்த இருவரும், வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே சமீப காலமாக நடிக்கும் நிலையில், இவர்களுக்கு சம்பளமாக கோடிகளில் பணத்தை வாரி இறைக்க தயாரிப்பாளர்களும் தயாராக உள்ளனர்.
Vidaamuyarchi : ஓடிடிக்கு பார்சல் பண்ணி அனுப்பப்பட்ட விடாமுயற்சி - எப்போ ரிலீஸ் தெரியுமா?
விஜய்யை விட குறைவான படங்களில் நடித்த அஜித்:
ஆனால் கடந்த 5 வருடமாக அஜித்தின் படங்களின் எண்ணிக்கை மட்டும் இன்று அவருடைய படங்களின் வசூலும் விஜய் படங்களை விட குறைவாகவே வசூல் செய்து வருகிறது. இது பற்றி முழுமையாக பார்ப்போம். கடந்த 5 வருடங்களில் விஜய் நடிப்பில் மொத்தம் 6 படங்கள் வெளியாகி உள்ளது. அதன் படி 2019-ல் பிகில், மாஸ்டர், பீஸ்ட், வாரிசு, லியோ, மற்றும் கோட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த ஆண்டு 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார்.
5 வருட விஜய் மற்றும் அஜித் பட வசூல்
அதே போல் அஜித் கடந்த 2019 முதல் 2024-வரை 4 படங்களில் நடித்திருந்த நிலையில்... கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட 'விடாமுயற்சி' இந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. அஜித் நடிப்பில் கடந்த 5 ஆண்டுகளில், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு, போன்ற படங்களை வெளியாகின. இந்த அணைத்து படங்களுமே தளபதி விஜய்யின் படங்களுக்கு நிகரான பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டது.
ஏகே 64 அப்டேட் : ரஜினி பட இயக்குனருடன் முதன்முறையாக கூட்டணி அமைக்கும் அஜித்!
அஜித் மற்றும் விஜய் படங்களின் வசூல் நிலவரம்
2019-ல் விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' ரூ.325 கோடி வசூல் செய்த நிலையில், அதே ஆண்டு வெளியான 'விஸ்வாசம்' ரூ.200 கோடி மட்டுமே வசூலித்தது. அதே போல் இதே ஆண்டு வெளியான 'நேர்கொண்ட பார்வை' படமும் ரூ.180 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது. 2021-ல் விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' ரூ.300 கோடி வசூல் செய்த நிலையில், இந்த ஆண்டு அஜித் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாமல் போனது. 2022-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான, 'பீஸ்ட்' தோல்வி படம் என விமர்சனங்களுக்கு ஆனாலும் வசூல் ரீதியாக ரூ.250 கோடி கலெக்ஷன் செய்ததது. இதே ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' ரூ.150 கோடி வரை மட்டுமே வசூல் செய்து தோல்வியை தழுவியது.
அதிர்ச்சி தோல்வியை தழுவிய விடாமுயற்சி
2023-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் 'வாரிசு' மற்றும் 'லியோ' என இரண்டு படங்கள் வெளியாகின. இதில் வாரிசு திரைப்படம் ரூ.310 கோடியும், லியோ ரூ.620 கோடி வரை வசூல் செய்தது. ஆனால், அஜித்தின் துணிவு திரைப்படம் கலவையான விமர்சங்களுடன் ரூ.194 கோடி மட்டுமே வசூல் செய்தது. 2024-ல் விஜய் நடிப்பில் கோட் படம் வெளியானது. இது சுமார் ரூ.450 கோடி வசூல் ஈட்டியது. ஆனால், அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை என்றாலும், இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'விடாமுயற்சி' ரூ.175 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏகே 64 அப்டேட் : ரஜினி பட இயக்குனருடன் முதன்முறையாக கூட்டணி அமைக்கும் அஜித்!
குட் பேட் அக்லீ கைகொடுக்குமார?
இதை வைத்து பார்க்கும் போது அஜித்துக்கு ரசிகர்கள் பலம் இருந்தாலும் இது வரை வசூல் ரீதியாக விஜய்யை பீட் பண்ண முடியாத ஒரு நடிகராகவே உள்ளார் என்பதை பார்க்க முடிகிறது. இதற்க்கு காரணம் இவர் கதை தேர்வில் செய்யும் சொதப்பல் என்றே பல ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். ஒரு வேலை அஜித் தன்னுடைய 'குட் பேட் அக்லீ' மூலம் இந்த ஆண்டு தன்னுடைய அழுத்தமான வெற்றியை பதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதே போல் விஜய்யின் தன்னுடைய கடைசி படமான 'ஜனநாயகம்' மூலம் ரூ.1000 கோடி வசூல் செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.