Vidaamuyarchi : ஓடிடிக்கு பார்சல் பண்ணி அனுப்பப்பட்ட விடாமுயற்சி - எப்போ ரிலீஸ் தெரியுமா?
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது அதைப்பற்றி பார்க்கலாம்.

விடாமுயற்சி அஜித்
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் முதன்முறையாக கூட்டணி அமைத்த படம் விடாமுயற்சி. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மேலும் அர்ஜுன், ரெஜினா கசெண்ட்ரா, ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் பணியாற்றி இருந்தனர். மேலும் இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றி இருந்தார்.
ரசிகர்களை திருப்திபடுத்தாத விடாமுயற்சி
விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால் படத்தின் ரிலீஸை பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைத்தனர். அதன்படி பிப்ரவரி 6ந் தேதி விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆனது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்கள் திருப்திபடுத்தவில்லை. அவர்கள் விரும்பும் மாஸ் காட்சிகள் படத்தில் இல்லாததால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதையும் படியுங்கள்... கங்குவாவை விட கம்மி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் காத்துவாங்கும் விடாமுயற்சி!
ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி
இதன் எதிரொலியாக விடாமுயற்சி படத்தின் வசூலும் பெரியளவில் இல்லை. இப்படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஆகும் நிலையில், இன்னும் 150 கோடி கூட வசூலிக்கவில்லை. இந்த வாரத்தோடு விடாமுயற்சி படத்திற்கு எண்டு கார்டு போட்டுவிடுவார்கள் என கூறப்படுகிறது. ஏனெனில் இந்த வாரம் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இதனால் விடாமுயற்சி படத்தின் ஓட்டம் இந்த வாரத்தோடு முடிவுக்கு வர அதிகம் வாய்ப்புள்ளது.
ஓடிடியில் எப்போ ரிலீஸ்?
தியேட்டரில் இருந்து தூக்கப்பட உள்ள விடாமுயற்சி திரைப்படம் விரைவில் ஓடிடிக்கு வர உள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அந்நிறுவனம் இப்படத்தை வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. விடாமுயற்சி படம் சொதப்பினாலும் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களை திருப்தி படுத்தும் என கூறப்படுகிறது. அப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... அஜித் போலீசா நடிக்க இருந்த முதல் படம் இந்த படமா? படம் ரிலீஸ் ஆகலையா?