அஜித் போலீசா நடிக்க இருந்த முதல் படம் இந்த படமா? படம் ரிலீஸ் ஆகலையா?
Ajith First Police Movie Maha : அஜித் முதன் முதலாக போலீசாக நடிக்க இருந்த படம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.

அஜித் போலீசா நடிக்க இருந்த முதல் படம் இந்த படமா? படம் ரிலீஸ் ஆகலையா?
Ajith First Police Movie Maha : வருடத்திற்கு ஓரிரு படங்களில் நடித்து வரும் அஜித் கடைசியாக 2023 ஆம் ஆண்டு துணிவு படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு கடந்த ஆண்டு அஜித்தோட நடிப்பில் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால், அவர் 2 படங்களில் நடித்து வந்தார். அதில் விடாமுயற்சி 2025 பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. கடைசியாக பிப்ரவரி 6ஆம் தேதி வெளியானது.
அஜித் போலீசா நடிக்க இருந்த முதல் படம் இந்த படமா? படம் ரிலீஸ் ஆகலையா?
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, ஆரவ், அர்ஜூன், ரெஜினா ஆகியோ பலரது நடிப்பில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ரூ.350 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. ஆனால், படம் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில் ரூ.125 கோடி வரையில் வசூல் குவித்திருக்கிறது. பெரியளவில் படம் வசூல் குவிக்கவில்லை. எதிர்பார்த்த அளவில் படம் ஓடவில்லை.
அஜித் போலீசா நடிக்க இருந்த முதல் படம் இந்த படமா? படம் ரிலீஸ் ஆகலையா?
கூடிய விரைவில் ஓடிடிக்கு வந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், படத்தோட கதை மற்றும் மொக்கையான காதல் காட்சிகள். அஜித் மற்றும் த்ரிஷா இடையிலான காதல் காட்சிகள் பெரியளவில் ரசிக்கும்படியாகவே இல்லை என்பது ரசிகர்களின் வேதனை. அதுமட்டுமின்றி அஜித்தை பல விதமாக காட்டியிருப்பது ரசிக்க தோன்றவில்லை. இப்படி பலவிதமான காரணங்களால் விடாமுயற்சி பெரியளவில் சோபிக்கவில்லை.
அஜித் போலீசா நடிக்க இருந்த முதல் படம் இந்த படமா? படம் ரிலீஸ் ஆகலையா?
இனி வரும் வாரங்களில் மாஸான படங்கள் திரைக்கு வரும் என்பதால் விடாமுயற்சி ஓடிடிக்கு வந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு பல திரையரங்குகளில் விடாமுயற்சி வெறிச்சோடி காணப்பட்டது. இந்தப் படத்திற்கு பிறகு அஜித்தின் குட் பேட் அக்லி திரைக்கு வர இருக்கிறது. தற்போது அஜித் கார் ரேஸில் பிஸியாக இருக்கும் நிலையில் இதுவரையில் எந்த படத்திலும் கமிட்டாகவில்லை. எப்படியும் 2026 ஆம் ஆண்டு தான் புதிய படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.
அஜித் போலீசா நடிக்க இருந்த முதல் படம் எது? படம் ரிலீஸ் ஆகலையா?
சினிமாவில் அஜித் எத்தனையோ படங்களில் போலீஸ் ரோல் ஏற்று நடித்திருக்கிறார். வலிமை, என்னை அறிந்தால், ஆரம்பம், கிரீடம், ஆஞ்சநேயா, மங்காத்தா என்று பல படங்களில் போலீஸ் ரோலில் நடித்திருக்கிறார். ஆனால், இந்த படங்களுக்கு முன் அவர் போலீஸ் ரோலில் நடிக்க இருந்தார். அந்தப் படம் தான் மகா. இந்தப் படத்தின் ஷூட்டிங் எல்லாம் தொடங்கப்பட்ட நடைபெற்று வந்தது. அதோடு மகா (Ajith First Police Movie Maha Movie) படத்தோட போஸ்டர்களும் வெளியானது. எதோ ஒரு காரணத்திற்காக அந்தப் படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு இப்போது வரையில் அந்தப் படம் எடுக்கப்படவில்லை.
அஜித் போலீசா நடிக்க இருந்த முதல் படம் எது? படம் ரிலீஸ் ஆகலையா?
இந்தப் படத்தை ரவிராதா இயக்க இருந்தார். நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலமாக எஸ் எஸ் சக்கரவர்த்தி மகா படத்தை தயாரிக்க இருந்தார். வித்யாசாகர் இசை என்று எல்லாம் முடிவு செய்யப்பட்டு போஸ்டரும் வெளியானது. ஆனால், மகா படம் கைவிடப்பட்டது. இதற்கு முன்னதாக எஸ் எஸ் சக்கரவர்த்தியின் நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஜித் ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜி, வரலாறு என்று பல படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.