- Home
- Cinema
- அட்டகாசம் vs அஞ்சான்... போட்டிபோட்டு ரீ-ரிலீஸ் ஆகும் அஜித், சூர்யா படங்கள் - வெல்லப்போவது யார்?
அட்டகாசம் vs அஞ்சான்... போட்டிபோட்டு ரீ-ரிலீஸ் ஆகும் அஜித், சூர்யா படங்கள் - வெல்லப்போவது யார்?
அஜித் நடிப்பில் உருவான அட்டகாசம் திரைப்படமும், சூர்யாவின் கேங்ஸ்டர் திரைப்படமான அஞ்சானும் வருகிற நவம்பர் 28ந் தேதி திரையரங்குகளில் போட்டிபோட்டு ரீ ரிலீஸ் ஆக உள்ளன.

Attagasam vs Anjaan Re Release
தமிழ் சினிமாவில் தற்போது ரீ ரிலீஸ் ட்ரெண்ட் உருவாகி இருக்கிறது. கடந்த ஆண்டு முதல் ரிலீஸ் படங்களுக்கு சமூக வரவேற்பு கிடைத்து வருவதால், விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை போட்டி போட்டு ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர். கடந்த வாரம் கூட நடிகர் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த பிரண்ட்ஸ் படம் ரீ ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இந்த வாரம் இரண்டு படங்கள் ரீ ரிலீஸ் ஆக உள்ளன.
அதில் ஒரு திரைப்படம் தான் அட்டகாசம். அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த சரண் தான் அட்டகாசம் படத்தை இயக்கியிருந்தார். கடந்த 2004 ஆம் ஆண்டு ரிலீசான அட்டகாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பூஜா நடித்திருந்தார். கருணாஸ், ரமேஷ் கண்ணா, சுஜாதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
ரீ-ரிலீஸ் ஆகும் அஞ்சான் மற்றும் அட்டகாசம்
இப்படத்தை கடந்த அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அட்டகாசம் திரைப்படம் வருகிற நவம்பர் 28ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அட்டகாசம் படத்திற்கு போட்டியாக இந்த வாரம் சூர்யாவின் அஞ்சான் படமும் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. லிங்குசாமி இயக்கிய இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ரீ எடிட் செய்யப்பட்டு தற்போது திரைக்கு வர உள்ளது. இதற்கான டிக்கெட் புக்கிங் ஆன்லைனில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

