கோலிவுட்டின் ‘ஹிட்மேன்’ உடன் கூட்டணி அமைக்கும் அஜித்... ஏகே 65 படத்தின் இயக்குனர் இவரா?
நடிகர் அஜித்குமாரின் ஏகே 64 படத்திற்கான அப்டேட் எப்போ வரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், அவர் நடிக்க உள்ள ஏகே 65 பட இயக்குனர் குறித்த அப்டேட் லீக் ஆகி உள்ளது.

AK 65 Movie Director
நடிகர் அஜித் குமார் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் விடாமுயற்சி தோல்வியை தழுவினாலும், குட் பேட் அக்லி படம் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார் அஜித். அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.243 கோடி வசூலித்து அஜித்தின் கெரியரில் அதிக வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையையும் படைத்தது. குட் பேட் அக்லி படத்திற்கு பின்னர் அஜித் நடிக்க உள்ள ஏகே 64 படத்தை யார் இயக்கப்போகிறார் என்பதை இன்னும் அறிவிக்காவிட்டாலும், அந்த இயக்குனர் பற்றிய அப்டேட் ஏற்கனவே வெளியாகிவிட்டது.
அஜித்தின் அடுத்த படம்
அதன்படி குட் பேட் அக்லி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் ஏகே 64 படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ராகுல் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் ஹார்பர் பின்னணியில் ஒரு கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளதாம். இப்படம் குறித்த அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது ஜனவரி மாதம் தான் வரும் என அஜித்தே அண்மையில் கூறிவிட்டார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித்
ஏகே 64 படத்தின் அப்டேட்டுக்காக ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு திடீர் பரிசாக ஏகே 65 படத்தின் அப்டேட் வந்துள்ளது. அதன்படி, அஜித்தின் 65வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளாராம். அப்படம் 2027-ம் ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளதாம். அப்படத்திற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருக்கிறதாம். அஜித்துக்கும் லோகேஷ் கனகராஜ் சொன்ன ஒன்லைன் பிடித்துவிட்டதால், அவர் கிரீன் சிக்னல் காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தை தயாரிக்கப்போவது யார் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோவான லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான கூலி படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அப்படத்தின் ரிசல்டால், அவர் அடுத்ததாக ரஜினி, கமலை வைத்து இயக்குவதாக இருந்த படம் கைநழுவி போனது. தற்போது தான் ஹீரோவாக அறிமுகமாக உள்ள டிசி பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார் லோகேஷ் கனகராஜ். அப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ஜோடியாக பாலிவுட் நடிகை வமிகா கபி நடிக்கிறார்.