விடாமுயற்சி வசூல் பிக்-அப் ஆனதா? 3ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் மூன்றாம் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

அஜித்தின் விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நாயகனாக நடித்துள்ள படம் விடாமுயற்சி. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். கடைசியாக என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்த இந்த ஜோடி, சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறது. மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதுதவிர ஆரவ், ரெஜினா, யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது.
விடாமுயற்சி ரிலீஸ்
விடாமுயற்சி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவரது இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக அனிருத் இசையமைத்த சாவதீகா பாடல் படமாக்கிய விதமும், அதில் அஜித்தின் துள்ளலான நடனமும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. வழக்கமான அஜித் படம் போல் இல்லாமல் வித்தியாசமாக உருவாக்கி இருக்கிறார் மகிழ் திருமேனி. குறிப்பாக இதன் முதல் பாதியில் சண்டைக் காட்சிகளே இல்லாதது பெரும் ஆச்சர்யம் தான்.
இதையும் படியுங்கள்... விடாமுயற்சிய விடுங்க; சம்பவம் செய்ய ரெடியான குட் பேட் அக்லி! தரமான அப்டேட் வந்தாச்சு
விடாமுயற்சி வசூல்
விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ந் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. விடுமுறை தினமாக இல்லாவிட்டாலும் முதல் நாளிலேயே இந்தியாவில் ரூ.25.5 கோடி வசூலித்து மாஸ் காட்டியது இப்படம். பின்னர் இரண்டாம் நாளில் மளமளவென குறைந்தது இப்படத்தின் வசூல். இரண்டாம் நாளில் வெறும் 10 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. இருப்பினும் மூன்றாம் நாளான நேற்று விடுமுறை தினம் என்பதால் விடாமுயற்சி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பிக் அப் ஆகி இருக்கிறது.
100 கோடியை நெருங்கும் விடாமுயற்சி
அதன்படி மூன்றாம் நாளில் இப்படம் இந்தியாவில் ரூ.15 கோடி வசூலித்து உள்ளது. இதன்மூலம் இப்படம் இந்தியாவில் மட்டும் மூன்று நாட்கள் முடிவில் 50 கோடி வசூலை கடந்துள்ளது. வெளிநாடுகளில் இப்படம் ரூ.22 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது. இதுதவிர ஆந்திராவில் 1.5 கோடியும், கர்நாடகாவில் 5 கோடியும், கேரளாவில் 1.8 கோடியும், மற்ற மாநிலங்களில் 70 லட்சமும் வசூலித்துள்ள இப்படம், மூன்று நாட்கள் முடிவில் உலகளவில் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது. இன்றும், விடுமுறை தினம் என்பதால் விடாமுயற்சி படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இன்றைய நாள் முடிவில் அப்படம் ரூ.100 கோடி என்கிற இமாலய வசூலை எட்டிவிடும். இந்த ஆண்டின் முதல் 100 கோடி வசூல் செய்த தமிழ் படம் என்கிற சாதனையையும் விடாமுயற்சி படைக்க உள்ளது.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் கில்லி போல் சொல்லி அடிக்கும் விஜய்; சொதப்பும் அஜித்! காரணம் என்ன?