ஐஸ்வர்யாவை வேறொரு பெண்ணுக்காக ஏமாற்றினாரா தனுஷ்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ரஜினிகாந்த் மகள்!
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும், விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சிவில் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளதாக ட்விட்டர் பிரபலமும், சென்சார் போர்டு மெம்பருமான உமர் சந்து தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும், விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சிவில் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளதாக ட்விட்டர் பிரபலமும், சென்சார் போர்டு மெம்பருமான உமர் சந்து தெரிவித்துள்ளார்.
இவர் நடிப்பில், சமீபத்தில் வெளியான வாத்தி, திருச்சிற்றம்பலம், போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, கேப்டன் மில்லர், படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக வடசென்னை 2, மற்றும் 'பியார் ப்ரேமம் காதல்' படத்தின் இயக்குனர், இளன் இயக்கத்திலும் ஒரு முழு நேர காதல் கதையிலும் நடிக்க தனுஷ் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக தனுஷ் முழு நேர காதல் கதையுடன் நடித்த திரைப்படம் என்றால் அது அவரின் மனைவி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 3 திரைப்படம் தான். இந்த படத்தை தொடர்ந்து விரைவில் முழு நேர காதல் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. அதேபோல் ஹாலிவுட்டில் இவர் நடித்த 'தி கிரே மேன்' படத்தின் இரண்டாம் பாகத்திலும் விரைவில் இணைவார் என கூறப்படுகிறது.
தனுஷ் ஒருபுறம் திரையுலகில் பிஸியாக இருந்தாலும், மற்றொருபுறம் இவருடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், விவாகரத்து குறித்த தகவலை வெளியிட்ட பின்னர்... தன்னுடைய திரைப்படப் பணியிலும், ஜூம் வொர்க் அவுட் மற்றும் ஆன்மிகம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் ஒருபுறம் இவர்களின் விவாகரத்து குறித்த தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இருவருக்கும் இடையே சில சமரச பேச்சு வார்த்தைகளும் நடந்து வருவதாகவும், எனவே மீண்டும் இருவரும் இருவரும் பிள்ளைகளுக்காக இணைந்து வாழ வாய்ப்புகள் உண்டு என கூறப்பட்டது.
காஷ்மீரில் பிரபலங்களுடன் களைகட்டிய லோகேஷ் கனகராஜ் பார்த் டே பார்ட்டி..! வைரலாகும் போட்டோஸ்..!
ஆனால் தற்போது அதற்க்கு வாய்ப்பே இல்லை என்பது போல், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை சிவில் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், ஐஸ்வர்யாவை வேறொரு பெண்ணுக்காக தனுஷ் ஏமாற்றியதாகவும் ட்விட்டர் பிரபலமான உமர் சந்து தெரிவித்துள்ளார். இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரிய வராத நிலையில்.. விரைவில் இதுகுறித்த உண்மை தகவல் என்னவென்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் வைத்து கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் 'லால் சலாம்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதியில் மார்ச் 7-ஆம் தேதி துவங்கிய நிலையில், பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகை ஜீவிதா ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா கூட இப்படி பண்ண மாட்டாங்க! வயசுக்கு மீறிய செயலால்... கல்லூரி விழாவில் அசிங்கப்பட்ட அனிகா..!