Actor Dhanush : மாறன் தந்த மரண அடி... வேறு வழியின்றி மீண்டும் வெற்றிமாறனை நாடும் தனுஷ்?
Actor Dhanush : தற்போது தனுஷ், செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், தெலுங்கில் வாத்தி, ஹாலிவுட்டில் தி கிரே மேன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
கவுத்திவிட்ட ஜகமே தந்திரம்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று கவுத்திவிட்டது. இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்து வந்த தனுஷ் நிச்சயம் ஹிட் கொடுப்பார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
மார்க்கெட் சரிந்தது
அண்மையில் நேரடியாக ஓடிடி-யில் வெளியான மாறன் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று மரண அடி வாங்கியது. அடுத்தடுத்து இரண்டு பிளாப் படங்களைக் கொடுத்ததால் தனுஷின் மார்க்கெட்டும் தற்போது கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இது அவர் நடிப்பில் இனி வர இருக்கும் படங்களின் பிசினஸை பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
அப்செட்டில் தனுஷ்
இந்நிலையில், அடுத்தடுத்து படங்கள் தோல்வி அடைந்ததால் கடும் அப்செட்டில் இருக்கும் தனுஷ், அடுத்தது நிச்சயம் ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளாராம். இதற்காக தனது பேவரைட் இயக்குனரான வெற்றிமாறனை சந்தித்து, அவருடன் கூட்டணி அமைப்பது குறித்து தனுஷ் பேசியதாக கூறப்படுகிறது.
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி
ஆனால் வெற்றிமாறன் அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்துள்ளதால், இப்போது கூட்டணிக்கு சாத்தியமில்லை என சொல்லிவிட்டாராம். முன்னதாக தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் போன்ற படங்கள் வெளியாகின. இந்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
தற்போது தனுஷ் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், தெலுங்கில் வாத்தி, ஹாலிவுட்டில் தி கிரே மேன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... Anushka shetty : பிரம்மாண்ட படத்தில் நடிக்க மறுத்த சமந்தா... நான் ரெடி-ன்னு வாய்ப்பை தட்டித்தூக்கிய அனுஷ்கா