- Home
- Cinema
- Anushka shetty : பிரம்மாண்ட படத்தில் நடிக்க மறுத்த சமந்தா... நான் ரெடி-ன்னு வாய்ப்பை தட்டித்தூக்கிய அனுஷ்கா
Anushka shetty : பிரம்மாண்ட படத்தில் நடிக்க மறுத்த சமந்தா... நான் ரெடி-ன்னு வாய்ப்பை தட்டித்தூக்கிய அனுஷ்கா
Anushka shetty : வயதாகி வருவதால் அனுஷ்கா இனி படங்களில் நடிக்க மாட்டார் என திரையுலக வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு வந்த நிலையில், தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி அதிர்ச்சி கொடுத்துள்ளார் அனுஷ்கா.

மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அனுஷ்கா. இதையடுத்து டோலிவுட் பக்கம் சென்ற அனுஷ்காவுக்கு அங்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது.
பின்னர் சில ஆண்டுகள் கழித்து தமிழில் ரீ என்ட்ரி கொடுத்த அனுஷ்காவுக்கு, விஜய் அஜித் சூர்யா ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு குறுகிய காலத்தில் கிடைத்தது.
அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்ததன் மூலம் அனுஷ்காவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. குறிப்பாக பாகுபலி படத்தில் இவர் நடித்த தேவசேனை என்கிற கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இஞ்சி இடுப்பழகி படத்துக்காக குண்டான அனுஷ்கா பின்னர் உடல் எடையை குறைக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். இதையடுத்து அவர் நடித்த சைலன்ஸ் படமும் ஃபிளாப் ஆனதால், அவருக்கு படவாய்ப்புகளும் குறையத் தொடங்கின.
தற்போது அவரது வயது 40- ஐ நெருங்கி வருவதால் இனி படங்களில் நடிக்க மாட்டார் என திரையுலக வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு வந்த நிலையில், தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி அதிர்ச்சி கொடுத்துள்ளார் அனுஷ்கா. அந்த வகையில் இவர் அண்மையில் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டானார்.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு கன்னட படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக பின்னணி பாடகி நாகரத்தினம்மாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் பயோபிக் படத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ளாராம்.
முதலில் இந்தப் படத்தில் சமந்தாவை நடிக்க வைக்க படக்குழு முயன்றதாம். ஆனால் அவர் நடிக்க மறுத்து விட்டதால் அந்த வாய்ப்பு தற்போது அனுஷ்காவுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... BB Ultimate : திடீரென கட்டிப்பிடித்ததால் ஆத்திரம்... பாலாவை கடித்து வைத்த ரம்யா பாண்டியன் - வைரலாகும் வீடியோ