காதலினு சொன்னதுக்கு மன்னிச்சிருங்க ஷங்கர் சார்.. அதிதி எனக்கு தங்கச்சி மாதிரி- அந்தர் பல்டி அடித்த கூல் சுரேஷ்
Cool Suresh : விருமன் படம் பார்த்த பின் இயக்குனர் ஷங்கர் மகளை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய கூல் சுரேஷ், தற்போது அவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி, சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். அவர் நடித்த விருமன் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் ரிலீசானது. இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் அதிதி. முத்தையா இயக்கி இருந்த இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.
aditi shankar
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. விருமன் படம் ரிலீசான முதல் நாளே ரூ.8 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதன்மூலம் நடிகர் கார்த்தியின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக விருமன் மாறி உள்ளது. இப்படம் தொடர்ந்து வசூலை வாரிக் குவித்து வருகிறது.
இதையும் படியுங்கள்... இன்னும் ஒரு வருஷமா! பிரபாஸின் ‘சலார்’ படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த KGF இயக்குனர்... ஷாக்கான ரசிகர்கள்
நடிகை அதிதிக்கும் தமிழ் சினிமாவில் சிறப்பான தொடக்கமாக அமைந்துள்ளது. இப்படத்தின் அவரது நடிப்புக்கும், நடனத்துக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. முதல் படத்திலேயே அவருக்கென ரசிகர் மன்றம் தொடங்கிய நிகழ்வுகளும் அரங்கேறி உள்ளன. இதனிடையே ஷங்கரின் மகள் அதிதியை தான் காதலிப்பதாக கூறி நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் பரபரப்பை ஏற்படுத்தினார்.
படத்தில் காதலை சேர்த்துவைப்பது போல் தனது காதலையும் சேர்த்து வைக்குமாறு இயக்குனர் ஷங்கருக்கு வேண்டுகோள் விடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் பேசி இருந்தார் கூல் சுரேஷ். இந்நிலையில், தற்போது ஷங்கர் மகளை காதலிப்பதாக கூறியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளது மட்டுமின்றி அதிதி தனக்கு தங்கச்சி மாதிரி என கூறி அந்தர் பல்டி அடித்துள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் அவரை கிண்டலடித்து வருகின்றன. ‘என்ன தல இந்த முறை அடி பலமோ’ என சமூக வலைதளங்களில் அவரை ட்ரோல் செய்தும் வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... விஜய் சென்ற அதே இடத்தை தேர்வு செய்த அஜித்... அடுத்து எங்கே செல்கிறது AK 61 படக்குழு? வெளியான சூப்பர் அப்டேட்!