அடடா... அழகு ராட்சசியே! 40 வயதிலும்... பிரெஷ் ரோஜா போல் ரெட் ட்ரெஸ்ஸில்... கேரள ரசிகர்களை அசர வைத்த குந்தவை!
பொன்னியின் செல்வன் 2 புரோமோஷன் பணிகளில்.. கவனம் செலுத்தி வரும் த்ரிஷா... கேரள மாநிலம் கொச்சியில் இந்த படத்தை புரமோட் செய்தபோது எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில், தொடர்ந்து ஹீரோயினாக மட்டுமே நடித்து, ரசிகர்கள் மனதில் ஈடுஇணையிலா ஹீரோயினாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் த்ரிஷா தற்போது, பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், 'பொன்னியின் செல்வன்' நாவலை மையமாக வைத்து 2 பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரை ரசிகர்கள் மனங்களை கொள்ளைகொண்ட.. ‘கண்ணெதிரே தோன்றினால்’ 250 எபிசோட்களை நிறைவு செய்தது!
இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி... இப்படத்திற்கு தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் செலவு செய்த மொத்த பட்ஜெட்டையும் முதல் பாகத்திலேயே பெற்று கொடுத்தது.
இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. எனவே இந்த படத்தின் புரோமோஷன் பணியில், தீவிர கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயம் ரவி, சோபிதா துலி பாலா ஆகியோர் பம்பரமாக சுழன்று இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு சென்று படத்தை புரமோட் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில்... சென்னை, கோயம்பத்தூர், டெல்லி ஆகிய இடங்களை தொடர்ந்து... கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றது பொன்னியின் செல்வன் 2 படக்குழு. புரமோஷனுக்காக செய்தியாளர்களை சந்திக்க வந்த நடிகை த்ரிஷா, சிவப்பு நிற மாடர்ன் உடையில்... சிலிக்கா வைக்கும் ரோஜா மலர் போல் அழகு தேவதை போல் வந்திருந்தார்.
மேலும் தன்னுடைய உடைக்கு ஏற்றாப்போல், மூன்று லைன் நெக் பீஸ் மற்றும் அதற்க்கு ஏற்றாப்போல் கம்மல் அணிந்து... வேற லெவல் அழகில் ஜொலித்தார்.
த்ரிஷாவின் இந்த புரொமோஷன் நிகழ்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்... பொன்னியின் செல்வன் குத்தவைக்கு 40 வயசுன்னு சொன்னா யார் நம்புவார்கள் என்று ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அழகு ராட்சசி த்ரிஷாவின் போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் அதிக ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.