சிட்டாடெல் பிரீமியரில் ... சமந்தா போட்டிருந்த உடை மற்றும் நகையின் மதிப்பு இத்தனை கோடியா! கேட்டாலே ஜெர்க் ஆகுதே
சமீபத்தில் நடிகை சமந்தா லண்டனில் நடந்த 'சிட்டாடெல்' வெப் தொடரின் பிரீமியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், அவர் அணிந்திருந்த உடை மற்றும் நகைகளின் விலை குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில், முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா... தன்னுடைய திறமையால் தற்போது பாலிவுட், ஹாலிவுட் என முன்னேறி சென்றுகொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகி இருக்கும் தகவல் ஏற்கனவே வெளியான நிலையில், இதைத்தொடர்ந்து பிரபல ஹாலிவுட் தொடரான 'சிட்டாடெல்' தொடரின், இந்திய பதிப்பில் பிரியங்கா சோப்ரா நடித்த வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார்.
ஏற்கனவே பாலிவுடில் சமந்தா நடித்த 'தி ஃபேமிலி மேன் 2' வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, சமந்தா நடிக்கும் இந்த இன்வெர்ஸ்டிகேஷன் ஆக்ஷன் வெப் தொடரில், சண்டை காட்சிகளில் மட்டுமின்றி பலான காட்சிகளிலும்... துணிந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வெப் தொடரின் பிரீமியர் நிகழ்ச்சி சமீபத்தில் லண்டனில் நடந்தது. இதில் சமந்தா, வருண் தவான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பிரீமியர் நிகழ்ச்சிக்காக ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதமான கருப்பு நிற ஹாட் உடையில் வந்திருந்த சமந்தா, அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் நெக் பீஸ் மற்றும் பிரேஸ்லெட் ஒன்றையும் அணிந்திருந்தார். பாம்பு போன்ற வடிவத்தில் வைர கற்கள் பதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருந்த இந்த நெக் பீஸ் மற்றும் பிரேஸ்லெட்டின் விலை, மற்றும் சமந்தா அணிந்திருந்த ஆடையின் விலை குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஜெர்க்காக்கி உள்ளது.
சமந்தாவின் ஆடை பிரிட்டிஷ் வடிவமைப்பாளர் விக்டோரியா பெக்காமின் என்பவரால் டிசைன் செய்யப்பட்டிருந்தது. சமந்தாவின் கருப்பு நிற க்ராப் டாப் மற்றும நீண்ட பென்சில் குரோச்செட் பேட்ச்வொர்க் ஸ்கர்ட்டுடன் ஜோடியாக, அதன் மதிப்பு ரூ. 64,500. என கூறப்படுகிறது.
வைர கற்கள் பதித்த அவரது நகை Bvlgari Serpenti சேகரிப்பில் இருந்து வந்தது, சமந்தாவின் கைகளிலும், கழுத்திலும், சுற்றிக்கொள்ளும் வகையில் பாம்புகள் போல் வடிவமைக்கப்பட்டிருந்தன. பேரிக்காய் வடிவ மரகதக் கண்கள் மற்றும் செதில்கள் அதன் அற்புதமான கலை உணர்வின் வெளிப்பாடுகளாக பார்க்க பட்டது. இந்த நகைகள் சமந்தாவை அழகாக மட்டும் அல்ல. மிகவும் போல்டாகவும் காட்டியது. சமந்தாவின் வைர நெக்லஸ் ரூ.2.9 கோடி மதிப்புடையது, என்றும் அதற்கு இணையாக அவர் அணிந்திருந்த பிரேஸ்லெட் ரூ.2.6 கோடி என கூறப்படுகிறது.
சமந்தா நடிப்பில் இந்திய பதிப்பில் உருவாகி வரும் 'சிட்டாடல்' என்ற வெப் தொடரில் முதல் சீசன் ஆறு எபிசோடுகளை கொண்டுருள்ளது. இதில் இரண்டு எபிசோடுகள் ஏப்ரல் 28 அன்று பிரைம் வீடியோ இந்தியாவில் ஒளிபரப்பாகிறது. மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அடுத்தடுத்த எபிசோடுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 26 வரை ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் எதிர்பார்த்த சாகுந்தலம் திரைப்படம் கை விட்டாலும், சிட்டாடல் தொடர் தனக்கு மிகபெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் ந நம்புகிறார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.