- Home
- Cinema
- அரசியல்வாதியை கரம் பிடித்த தனுஷ் பட நாயகி ஸ்வரா பாஸ்கர்.! வைரலாகும் திருமண புகைப்படங்கள்.!
அரசியல்வாதியை கரம் பிடித்த தனுஷ் பட நாயகி ஸ்வரா பாஸ்கர்.! வைரலாகும் திருமண புகைப்படங்கள்.!
நடிகர் தனுஷ் நடித்த முதல் பாலிவுட் படமான 'ராஞ்சனா' படத்தில், இரண்டாவது நாயகியாக நடித்த ஸ்வரா பாஸ்கர் தன்னுடைய நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகையான ஸ்வரா பாஸ்கர், மிகவும் போல்டான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து மிகவும் பிரபலமானவர். அதே போல் அடிக்கடி சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில் கருத்துக்களை பதிவிட்டு விமர்சனங்களுக்கும் ஆளாகி வருபவர்.
குறிப்பாக ஸ்வரா பாஸ்கர், அடிக்கடி மோடி அரசை விமர்சித்து பல முறை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டுள்ள இவர், தன்னுடைய நீண்ட நாள் காதலரான அரசியல் பிரபலம் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
உள்ளாடை போடாமல்... ஷார்ட் மட்டும் அணிந்து கவர்ச்சி களோபரம் செய்யும் தேவியானி ஷர்மா! ஹாட் போட்டோஸ்!
சமாஜ்வாதி கட்சியின் இளைஞரணி தலைவரும், இளைஞர் தலைவருமான ஃபஹத் அகமதுவை இன்று நடிகை ஸ்வரா பாஸ்கர் திருமணம் செய்து கொண்டார். இருவரும் இன்று அதிகாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டனர். மேலும் இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஃபஹத் மற்றும் ஸ்வரா பாஸ்கர் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று இவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக நடந்திருந்தாலும், விரைவில்... பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற வாய்ப்புள்ளகாக கூறப்படுகிறது.
ஸ்வரா பாஸ்கர், மற்றும் ஃபஹத் அகமது திருமண புகைப்பங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை குவித்து வருகிறது. நடிகர் தனுஷுடன் 'ராஞ்சனா' படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக அறியப்பட்டவர் ஸ்வரா பாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.