MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Soundarya Last Words: ஹெலிகாப்டர் விபத்தில் இறப்பதற்கு முன் நடிகை சௌந்தர்யா பேசிய கடைசி வார்த்தைகள் என்ன?

Soundarya Last Words: ஹெலிகாப்டர் விபத்தில் இறப்பதற்கு முன் நடிகை சௌந்தர்யா பேசிய கடைசி வார்த்தைகள் என்ன?

Soundarya Last Words : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த சௌந்தர்யா 2004-ல் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இறப்பதற்கு சற்று முன்பு, அவர் தனது அண்ணி மகளிடம் என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 11 2026, 06:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Soundarya Final Conversation
Image Credit : others

Soundarya Final Conversation

அழகான புடவை, சிரித்த முகம் என அசல் பாரம்பரிய தமிழ் பெண்ணாகவே தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்தவர் நடிகை சௌந்தர்யா. எந்தவிதமான கவர்ச்சியும் இல்லாமல், குடும்பப்பாங்கான ரோல்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். ஆனால், சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே ஒரு கொடூரமான ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார்.

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்காத நினைவாக சௌந்தர்யா இருக்கிறார். 'மகாநடி' சாவித்திரிக்கு பிறகு அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் சௌந்தர்யா தான் என்று இன்றும் சொல்வார்கள். அவருடைய எளிமையான அழகு, நடிப்பு மற்றும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
குறுகிய காலத்தில் டாப் ஹீரோயின் ஆன செளந்தர்யா
Image Credit : X

குறுகிய காலத்தில் டாப் ஹீரோயின் ஆன செளந்தர்யா

'பொன்னுமணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சௌந்தர்யா, அடுத்தடுத்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்தார். புடவையில் ஒரு குடும்பத் தலைவியாகவே அவர் வாழ்ந்து காட்டினார். எந்தவிதமான ஓவர் கவர்ச்சியும் இல்லாமல் நம்பர் ஒன் ஹீரோயினாக கலக்கினார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த நேரத்தில்தான் விதியின் சதியால் அவர் பலியானார். சௌந்தர்யா நம்மை விட்டு பிரிந்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும், அவர் மீதான அன்பு ரசிகர்களுக்கு இன்னும் குறையவே இல்லை. அவருடைய படங்கள், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா பயணம் பற்றிய செய்திகள் அடிக்கடி இணையத்தில் வைரலாவது வழக்கம்.

34
வெற்றி நாயகி
Image Credit : others

வெற்றி நாயகி

டாக்டர் ஆக வேண்டும் என ஆசைப்பட்ட சௌந்தர்யா, எதிர்பாராத விதமாக சினிமாவுக்குள் நுழைந்தார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் என தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து ஒரு வெற்றி நாயகியாக வலம் வந்தார். அதிலும் ரஜினிகாந்த் - சௌந்தர்யா ஜோடி என்றால் ரசிகர்களுக்கு ஒரு தனி கிரேஸ் தான்.

2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றபோது நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சௌந்தர்யா உயிரிழந்தார். 'சிவசங்கர்' படத்தின் ஷூட்டிங் உட்பட பல சினிமா வேலைகளில் பிஸியாக இருந்த நேரத்தில்தான் இந்த துயர சம்பவம் நடந்தது. ஆனால், இறப்பதற்கு முன்பு சௌந்தர்யா கடைசியாக தனது அண்ணி மகளிடம் பேசியுள்ளார்.

44
காட்டன் புடவைகள் இல்லை
Image Credit : Asianet News

காட்டன் புடவைகள் இல்லை

தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்புவதற்கு முன்பு, தன்னிடம் போதுமான காட்டன் புடவைகள் இல்லை என்று அவர் தனது அண்ணி மகளிடம் கூறியுள்ளார். பிரச்சாரத்திற்காக புது காட்டன் புடவைகள் வாங்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். அதோடு, குங்குமம் வாங்கி வரச் சொல்லியும் கேட்டிருக்கிறார். அண்ணி மகளிடம் இந்த விஷயங்களை பேசிவிட்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் ஏறிய சௌந்தர்யா, அந்த கொடூர விபத்தில் தனது உயிரை இழந்தார்.

தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம், இந்தி, தெலுங்கு சினிமாவிலும் சௌந்தர்யா தனது முத்திரையை பதித்தார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடனும் அவர் இணைந்து நடித்துள்ளார். குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய புகழைப் பெற்ற நடிகை சௌந்தர்யாவின் நினைவுகள், ரசிகர்களின் மனதில் என்றென்றும் அழியாமல் இருக்கும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
 

Latest Videos
Related Stories
Recommended image1
Soundarya : மறைந்த நடிகை சௌந்தர்யாவின் 100 கோடி சொத்து என்ன ஆனது? இந்த 2 பேர் தான் பங்கு போட்டுக் கொண்டார்களா?
Recommended image2
Soundarya Death: 2 லட்சத்துக்காக உயிரை விட்ட சௌந்தர்யா.. பகீர் கிளப்பும் பிரபல இயக்குநர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved