- Home
- Gallery
- Soundarya : மறைந்த நடிகை சௌந்தர்யாவின் 100 கோடி சொத்து என்ன ஆனது? இந்த 2 பேர் தான் பங்கு போட்டுக் கொண்டார்களா?
Soundarya : மறைந்த நடிகை சௌந்தர்யாவின் 100 கோடி சொத்து என்ன ஆனது? இந்த 2 பேர் தான் பங்கு போட்டுக் கொண்டார்களா?
மறைந்த நடிகை சௌந்தர்யா விபத்தில் இறப்பதற்கு முன் ரூ.100 கோடி மதிப்பிலான உயில் எழுதியதாக கூறப்படும் நிலையில், அது குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வசீகரிக்கும் அழகு, அழகான சிரிப்பு என ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சௌந்தர்யா. பெங்களூரைச் சேர்ந்த இவர், கன்னடம் பேசும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். 1972ல் பிறந்த சௌந்தர்யா காந்தர்வா என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே வெற்றி பெற்றது.
Soundarya
இதை தொடர்ந்து அவருக்கு தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடிக்க தொடங்கினார். 90களில் தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், சிரஞ்சீவி, மோகன்லால், நாகார்ஜுனா, வெங்கடேஷ் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் சௌந்தர்யா. அதே போல் 20 ஆண்டு கால திரை வாழ்க்கையில் தென்ந்தியாவின் உச்ச நடிகையாக சௌந்தர்யா வலம் வந்தார்.
அதேபோல் பாலிவுட்டில், நடிகை சௌந்தர்யா அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடித்தார். சூரிய வம்சம் படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தில் சௌந்தர்யா தேவயானி நடித்த பாத்திரத்தில் நடித்தார். இவர் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்தப் படம் அவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்று ஹிந்திப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றது. அப்போது, கன்னடம், தமிழ், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சவுத்ரியா, ஹிந்தி பட வாய்ப்புகளை ஏற்க முடியாமல் தவித்தார்.
1993-ம் ஆண்டு வெளியான பொன்னுமணி படத்தின் மூலம் சௌந்தர்யா தமிழ் திரையுலகில் அறிமுகமானார், அதைத் தொடர்ந்து ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்தார். குறிப்பாக அவர் நடித்த தவசி, சொக்கத்தங்கம், அருணாச்சலம், படையப்பா, சேனாதிபதி, போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தனது சினிமா புகழ் மூலம் அரசியலில் புகழ்பெற்ற தலைவராக மாற நினைத்தார் சௌந்தர்யா. அதனால் அவர் 2004-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி, தனது கட்சிக்கு வாக்கு சேகரிக்க தனது சகோதரர் அமர்நாத்துடன் விமானத்தில் பயணம் செய்தார். ஆனால் அந்த விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடித்து சிதறியதில் சௌந்தர்யாவும், அவரின் சகோதரரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்போது ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது.
திருமணமான ஒரு வருடத்தில் மரணமடைந்த நடிகை சௌந்தர்யா, இறக்கும் போது கர்ப்பமாக இருந்தார் என்ற அவரின் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியது. சௌந்தர்யா இறப்பதற்கு முன் கோடிக்கணக்கான ரூபாய்க்கு சொந்த்க்காரியாக இருந்த நிலையில், அவர் தனது சொத்து தொடர்பாக உயில் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் வெளியானதும் அவரது தாயார் மற்றும் கணவர் இருவரும் மறுத்துவிட்டனர்.
Soundarya
31 வயதில் அவர் உயில் எழுத வேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் கூறினர். ஆனால் தற்போது நடிகை சௌந்தர்யாவின் 100 கோடி விவகாரம் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், உயில் எழுதியதை மறைத்து சௌந்தர்யாவின் அம்மா, கணவர் இருவரும் அவரின் சொத்துக்களை சமமாக பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.