MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Soundarya Death: 2 லட்சத்துக்காக உயிரை விட்ட சௌந்தர்யா.. பகீர் கிளப்பும் பிரபல இயக்குநர்!

Soundarya Death: 2 லட்சத்துக்காக உயிரை விட்ட சௌந்தர்யா.. பகீர் கிளப்பும் பிரபல இயக்குநர்!

Actress Soundarya : ஹெலிகாப்டர் விபத்தில் நடிகை சௌந்தர்யா இறந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால், வெறும் இரண்டு லட்ச ரூபாய் ஆசைக்காக அவர் தன் உயிரையே பணயம் வைத்தார் என ஒரு இயக்குநர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 02 2026, 01:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
புடவைக்கே அழகு சேர்த்த சௌந்தர்யா
Image Credit : X

புடவைக்கே அழகு சேர்த்த சௌந்தர்யா

ஹீரோயினாக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் சௌந்தர்யா. கிளாமர் உலகத்திலும் டீசண்டாக வலம் வந்து, புடவைக்கே இவர் அழகு சேர்த்தார். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து, அதிக வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அப்போது, ரஜினிகாந்த் - செளந்தர்யா காம்போவுக்குப் பெரிய கிரேஸ் இருந்தது. இவர்கள் இணைந்து நடித்த  படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
நம்பர் 1 ஹீரோயின்
Image Credit : Asianet News

நம்பர் 1 ஹீரோயின்

தமிழில் குறுகிய காலத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், கார்த்திக், விஜயகாந்த் போன்ற ஸ்டார் ஹீரோக்களுடன் நடித்த இவர் அக்கட தேசத்திலும் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, மோகன் பாபு, ராஜசேகர், ஜெகபதி பாபு, ஜேடி சக்கரவர்த்தி என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தெலுங்கில் அசைக்க முடியாத ஸ்டார் ஹீரோயினாக வலம் வந்தார். ஜெகபதி பாபு, வெங்கடேஷ் ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்டாலும், சாஃப்ட்வேர் இன்ஜினியர் ரகுவைத் திருமணம் செய்து செட்டில் ஆனார். ஆனால், திருமணமான ஒரே வருடத்தில் அவர் உயிரிழந்தார்.

Related Articles

Related image1
படையப்பா பட நடிகை சௌந்தர்யா நடிக்க பயந்த படம் எது தெரியுமா?
Related image2
நடிகை சௌந்தர்யா தயாரித்த ஒரே படம்; அதுவும் யாருக்குன்னு பாருங்க!!
35
ரசிகர்களை உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்து
Image Credit : MAA TV

ரசிகர்களை உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்து

2004-ல் நடந்த தேர்தலின்போது, சௌந்தர்யா பாஜகவுக்காகப் பிரச்சாரம் செய்யச் சென்றார். அப்போது அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்தது. இந்த கோர விபத்தில் சௌந்தர்யா மற்றும் அவரது சகோதரர் அமர்நாத் இருவரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையும் உலுக்கியது. இதுபற்றி சமீபத்தில் பேசிய இயக்குநர் கீதா கிருஷ்ணா, சௌந்தர்யா ஒரு நல்ல பெண் என்றும், ஹைதராபாத் வரும்போது பிரசாந்தி குடீரத்தில் தங்குமாறு நான்தான் அவருக்கு அறிவுரை கூறினேன் என்றும் குறிப்பிட்டார்.
45
இரண்டு லட்சத்துக்காக உயிரை விட்டாரா சௌந்தர்யா?
Image Credit : MAA TV

இரண்டு லட்சத்துக்காக உயிரை விட்டாரா சௌந்தர்யா?

சௌந்தர்யா ஒரு சிறந்த நடிகை. அவர் பெரிய கலர் இல்லை என்றாலும், அவருடைய ஸ்கிரீன் லுக் அட்டகாசமாக இருக்கும், நம்ம வீட்டுப் பெண் போலவே தெரிவார் என்று கீதா கிருஷ்ணா கூறினார். ஆனால், கெரியரின் உச்சத்தில் இருந்தபோது அவர் ஒரு தவறு செய்துவிட்டார். பாஜக தலைவர் வித்யாசாகர் ராவ் 2 லட்சம் ரூபாய் கொடுத்ததால், தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றார். அந்த சமயத்தில்தான் விபத்தில் சிக்கி இறந்தார். 'அந்த ரெண்டு லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்டுவிட்டார். அன்று அவர் பிரச்சாரத்திற்குச் செல்லாமல் இருந்திருந்தால், இன்றும் நாம் சௌந்தர்யாவைப் பார்த்துக் கொண்டிருப்போம்' என கீதா கிருஷ்ணா வேதனையுடன் தெரிவித்தார்.

55
சௌந்தர்யா நடித்த தமிழ் படங்கள்
Image Credit : MAA TV

சௌந்தர்யா நடித்த தமிழ் படங்கள்

கர்நாடகாவைச் சேர்ந்த சௌந்தர்யா, 1993ல் வெளிவந்த பொண்ணுமணி என்கிற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து சத்யராஜ் உடன் சேனாதிபதி படத்தில் நடித்த செளந்தர்யாவுக்கு கடந்த 1997-ம் ஆண்டு வெளிவந்த அருணாச்சலம் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் அடுத்த ஆண்டே கமலுடன் காதலா காதலா படத்தில் நடித்த அவர்,  ரஜினியின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான படையப்பாவிலும் நாயகியாக நடித்தார். பின்னர் விஜயகாந்த் உடன் கூட்டணி அமைத்த செளந்தர்யா அவருக்கு ஜோடியாக தவசி, சொக்கத்தங்கம் என அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
தமிழ் நடிகைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : குமாருக்கு வில்லங்கமான குடும்பத்தில் சம்பந்தம் பேசி முடித்த சக்திவேல்... அதிர்ச்சியில் கோமதி..!
Recommended image2
Siragadikka Aasai : சகுனி வேலை பார்த்த விஜயா... ரேகா - சத்யா கல்யாணத்துக்கு வந்த புது சிக்கல்
Recommended image3
Toxic: டீசரிலேயே கண்டிஷன் போட்ட யஷ்! டாக்ஸிக் படத்தை பார்க்க யாருக்கெல்லாம் தடை?
Related Stories
Recommended image1
படையப்பா பட நடிகை சௌந்தர்யா நடிக்க பயந்த படம் எது தெரியுமா?
Recommended image2
நடிகை சௌந்தர்யா தயாரித்த ஒரே படம்; அதுவும் யாருக்குன்னு பாருங்க!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved