- Home
- Cinema
- விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே... கணவர் பிரசன்னாவுடன் சினேகா ரொமான்டிக் போட்டோ ஷூட்! கலக்கல் போட்டோஸ்!
விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே... கணவர் பிரசன்னாவுடன் சினேகா ரொமான்டிக் போட்டோ ஷூட்! கலக்கல் போட்டோஸ்!
கடந்த ஓரிரு மாதமாக, சமூக வலைத்தளத்தில் நடிகை சினேகா மற்றும் பிரசன்னா ஜோடியின் விவாகரத்து செய்தி வைரலான நிலையில், தற்போது கணவர் பிரசன்னாவுடன் சினேகா எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், கமல், அஜித், தனுஷ், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து பிரபலமானவர் சினேகா.
குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம், வசீகரா, புதுப்பேட்டை, ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பவானி, போன்ற படங்கள் தற்போது வரை ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் உள்ளது.
இந்நிலையில் நடிகை சினேகா, பிரபல நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு.. பின்னர் காதலாக மாறியது. சில வருடங்கள் தங்களுடைய காதலை வெளியே சொல்லாமல் இருந்த இந்த ஜோடி, பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு பெற்றோர் சம்பந்தத்துடன், மிகப் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து திரைப்படங்கள், டான்ஸ், நிகழ்ச்சி போன்றவற்றில் நடுவராக இருந்து வரும் சினேகா... தன்னுடைய மகன் பிறந்த பின்னர், நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனுஷுக்கு ஜோடியாக 'பட்டாஸ்' திரைப்படத்தில் நடித்தார்.
மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட மீனா..! அவரே வெளியிட்ட மேக்கப் போடும் அட்டகாச வீடியோ!
ஆனால் இந்த படம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே நடிகை சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக மாறினார். பின்னர் சிறு இடைவெளி விட்ட சினேகா, மகள் பிறந்த பின்னர் தற்போது மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் மெல்ல மெல்ல திரையுலகில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக நடிகை சினேகா மற்றும் பிரசன்னாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, இருவரும் விவாகரத்து முடிவை கையில் எடுத்துள்ளதாக சில தகவல்கள் வெளியானது.
ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சினேகா அப்போதே தன்னுடைய கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட நிலையில், தற்போது கணவர் பிரசன்னாவுடன் மிகவும் ஸ்டைலிஷ் ஆன போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
சினேகா பிங்க் கலர் டைட் ட்ரெஸ்ஸிலும், பிரசன்னா டார்க் பச்சை நிற வெல்வெட் கோட் அணிந்து மிகவும் ஹாண்ட்சம்மாக, பியூட்டி ஃபுல் மனைவி சினேகாவுடன் ஜோடிகளாக போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.