அடிச்சு டார்ச்சர் பண்ணிய கணவர்... ஐட்டம் டான்ஸ் ஆட ரூ.50 ஆயிரம் - சோகங்கள் நிறைந்த சில்க் ஸ்மிதாவின் மறுபக்கம்
Silk Smitha : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்த சில்க் ஸ்மிதா, பற்றி யாரும் அறிந்திடாத சில தகவல்கள் இதோ.
நடிகை சில்க் ஸ்மிதா, கடந்த 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் எலுரு நகரில் பிறந்தார். இவரின் உண்மையான பெயர் விஜயலட்சுமி வடல்பட்டி. பண நெருக்கடி காரணமாக நான்காம் வகுப்பிற்குப் பின்னர் இவரால் படிப்பை தொடர முடியவில்லை. நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு இளம் வயதிலேயே திருமணமும் ஆனது.
இந்த திருமண வாழ்க்கை அவருக்கு சிறிதளவு கூட மகிழ்ச்சியை தரவில்லை, கணவரும், கணவர் வீட்டாரும் அடித்து துன்புறித்தியதால் மிகவும் மனம் உடைந்த போன நடிகை சில்க் ஸ்மிதா, வீட்டை விட்டு வெளியேறி, நடிகையாக வேண்டும் என்கிற கனவோடு சென்னைக்கு ஓடினார். நடிகை சில்க் ஸ்மிதா ஒரு டச்-அப் கலைஞராக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.
பின்னர் படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினார், நடிப்புக்கு போதுமான வரவேற்பு கிடைக்காததால், ஒரு கட்டத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடத்தொடங்கினார் சில்க் ஸ்மிதா. 'வண்டிசக்கரம்' படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது. அதன்பிறகு ஐந்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்தார். வெறும் 17 வருட சினிமா வாழ்க்கையில், 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரம்மிப்பை ஏற்படுத்தினார் சில்க்.
இதையும் படியுங்கள்... சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு 'தி டர்ட்டி பிக்ச்சர்' - பார்ட் 2 படத்தில் நாயகியாகும் பிரபல தமிழ் பட நடிகை?
80 களில் இருந்து 90 கள் வரை, தென்னிந்தியத் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார் சில்க் ஸ்மிதா. இந்த நேரத்தில் அவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மோகன்லால் போன்ற தென்னகத்தின் சூப்பர் ஸ்டார்களுடன் பணியாற்றினார். தினமும் குறைந்த பட்சம் 3 ஷிப்டுகளில் பணிபுரியும் அளவுக்கு பயங்கர பிசியாக இருந்த அவர், அப்போதே ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட ரூ.50 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்தாராம்.
சில்க் ஸ்மிதா, ஐட்டம் டான்சராக மட்டும் இல்லாமல், ஒரு சிறந்த நடிகையாகவும் இருந்ததால், இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன. அவர் நடித்த படங்கள் மற்றும் ஆடிய ஐட்டம் பாடல்கள் என அனைத்தும் தொடர்ந்து சூப்பர் ஹிட் ஆனாலும், ஒரு கட்டத்தில் சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்த தொடங்கியது.
இதையும் படியுங்கள்... தற்கொலை செய்து கொண்ட நடிகை சில்க் ஸ்மிதா.. இறுதி நேர உருக்கமான கடிதம்!
இதனால் படம் தயாரிக்க தொடங்கினார் சில்க். ஆனால் அவர் படத் தயாரிப்பில் ரூ.2 கோடி வரை நஷ்டத்தைச் சந்திக்க நேரிட்டதாகவும், அது அந்தக் காலத்தின் படி மிகப்பெரிய தொகை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் குடி பழக்கத்துக்கு ஆளானார். மது அருந்திவிட்டு ரகளை செய்து சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார்.
இறுதியாக, கடந்த 1996-ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி அன்று, சில்க் ஸ்மிதா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டிப் பறந்த சில்க்கின் வேதனையான மரணத்தை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இன்றுவரை அவரது மரணத்தில் உள்ள மர்மம் தீர்க்கப்படவில்லை. அவர் கொலை செய்யப்பட்டு விட்டதாகவும் சிலர் சந்தேகிக்கின்றனர்.
மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை வைத்து இதுவரை மூன்று படங்கள் வெளியாகியிருந்தாலும், அதில் கடந்த 2011ல் வெளியான 'தி டர்ட்டி பிக்சர்' மட்டுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் சில்க் ஸ்மிதாவாக வித்யா பாலனுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இது தவிர கன்னடத்தில் உருவான சில்க்கின் வாழ்க்கை படத்தில் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்கும், மலையாளத்தில் வெளிவந்த படத்தில் சில்க் வேடத்தில் நடிகை சனா கானும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மறு பிறவி எடுத்து வந்தாரா நடிகை சிலுக்கு ஸ்மிதா?...வைரலாகும் வீடியோ...