மறைந்து 23 வருடங்களானாலும் தமிழ் ரசிகர்களால் குறிப்பாக 80, 90 கிட்ஸ்களால் இன்னும் மறக்க முடியாத பெயர் சில்க் ஸ்மிதா. இந்த சில்கைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு பெண்ணின் வீடியோ ஒன்று நேற்று இரவு முதலே வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘79ம் ஆண்டில் ‘வண்டிச்சக்கரம்’படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை சுமார் 16 ஆண்டுகளுக்கு கிறங்கடித்து வந்த சில்க் ஸ்மிதா ‘96ம் ஆண்டில் தான் வசித்த அபார்ட்மெண்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் மறைந்து ஏறத்தாழ கால் நூற்றாண்டை நெருங்கும் நிலையில் அவரது பிறந்தநாள், நினைவு நாள் போன்ற தினங்களில் அவரது ரசிகர்கள் சிலுக்கின் அருமை, பெருமைகளை சிலாகிப்பது கொஞ்சமும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் அச்சு அசப்பில் அவரைப்போலவே உள்ள பெண் ஒருவர் ‘அடுத்த வாரிசு’படத்தில் சில்க் ஸ்மிதா ரஜினியுடன் டூயட் பாடிய ‘பேசக் கூடாது...’பாடல் பின்னணியில் ஒலிக்க 15 செகண்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று இரவு முதலே ட்விட்டர் வலைதளத்தில் அந்த வீடியோ வைரலாகிவரும் நிலையில் அந்தப் பெண் குறித்த விபரம் சேகரிக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வீடியோ,...