- Home
- Cinema
- ஓவர் ஹாட்... பார்த்தாலே பக்குனு ஆகுதே..! கையில் சரக்குடன் சகட்டுமேனிக்கு கிளாமர் போஸ் கொடுத்த சஞ்சனா சிங்
ஓவர் ஹாட்... பார்த்தாலே பக்குனு ஆகுதே..! கையில் சரக்குடன் சகட்டுமேனிக்கு கிளாமர் போஸ் கொடுத்த சஞ்சனா சிங்
sanjana Singh : பாண்டிச்சேரியில் பப் ஒன்றின் திறப்பு விழாவுக்கு படு கவர்ச்சியாக உடை அணிந்து வந்திருந்த நடிகை சஞ்சனா சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

ஆர்.பன்னீர்செல்வம் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற ரேனிகுண்டா படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சஞ்சனா சிங். இப்படத்துக்கு பின் இரண்டு ஆண்டுகள் பட வாய்ப்பின்றி தவித்த இவர் கே.வி.ஆனந்த் இயக்கிய கோ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார்.
இதன்பின்னர் காதல்பாதை, அஞ்சான், வெற்றிச்செல்வன், ரகளபுரம், சக்கப்போடு போடு ராஜா போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த சஞ்சனாவுக்கு ஒரு படத்தில் கூட ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் அவ்வப்போது தலைகாட்டி வந்தார் சஞ்சனா.
இவர் தற்போது சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் வடிவேலுவின் கம்பேக் படமான நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர ஜீவா, மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி வரும் கோல்மால் படத்திலும் ஒரு கிளாமர் ரோலில் நடித்து இருக்கிறார் சஞ்சனா. இந்த இரண்டு படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளன.
இதன்பின் எந்த படமும் கைவசம் இல்லாததால், பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக படு கவர்ச்சியில் இறங்கி உள்ளார் சஞ்சனா. பட விழாக்களிலோ அல்லது கடைதிறப்பு விழாக்களிலோ கலந்துகொண்டால் படு கவர்ச்சியான உடையில் தான் பங்கேற்று வருகிறாராம்.
அந்த வகையில் சமீபத்தில் பாண்டிச்சேரியில் பப் ஒன்று திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகை சஞ்சனா சிங், அங்கு மது அருந்திவிட்டு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.