தீர்மானங்களுக்கான நேரம் இது! வாட்டி வதக்கும் மயோசிட்டிஸ்! வலியை வெளிப்படுத்தாமல் சமந்தா போட்ட புத்தாண்டு பதிவு
நடிகை சமந்தா புத்தாண்டு தீர்மானம் குறித்து... சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள பதிவு தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, மையோசிட்டிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் நிலையில் கூட... தன்னுடைய வலியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புத்தாண்டு தீர்மானம் குறித்து பதிவு செய்துள்ளது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக'பானா காத்தாடி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. இதைத் தொடர்ந்து, ஒரு கட்டத்தில் விஜய், அஜித், சூர்யா, போன்ற டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
உங்க பொண்ணு மட்டும் காவி நிற பிகினி உடையில் போஸ் கொடுக்கலாமா? இயக்குனரை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!
முன்னணி நடிகையாக இருக்கும் போதே, கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கோவாவில் மிக பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடந்த நிலையில், திரையுலகமே பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு தன்னுடைய திரையுலக வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையையும் நேர்த்தியாக கொண்டு சென்றார் சமந்தா.
திடீரென இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, விவாகரத்து வரை சென்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், ஒரு முறை கூட சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் என்ன பிரச்சனை என்பதை வெளிப்படையாக கூறியது இல்லை. விவாகரத்து முடிவுக்கு பின்னர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த சமந்தா, ஒரு வழியாக தன்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவால் அதில் இருந்து மீண்டு. மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கினார்.
ஒரு வழியாக 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பை முடித்த வெற்றிமாறன்!
சமந்தாவின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற போல் தமிழ் தெலுங்கு திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்கள் சிலவற்றிலும் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் திடீரென மயோசிட்டிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாக, நடிகை சமந்தா அதிர்ச்சி கொடுத்த நிலையில்... அதற்கான சிகிச்சை நாட்களும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது என தெரிவித்திருந்தார். முதலில் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த சமந்தா அடுத்ததாக தென் கொரியா செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.
விரைவில் சமந்தா உடல்நலம் குணமாக வேண்டும் என ரசிகர்கள் ஒரு பக்கம் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில், அவ்வபோது தன்னுடைய ரசிகர்களுக்காக சமந்தா ஏதேனும் கருத்துக்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது வலியை மறந்து மௌனமாக சிரிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு... தன்னுடைய புத்தாண்டு தீர்மானம் குறித்து பதிவிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு இல்லத்தரசிகள் மனம் கவர்ந்து TRP-யில் டாப் 10 இடத்தை சீரியல்கள் பற்றிய தகவல்!
இதில் கூறியுள்ளதாவது... 'முன்னோக்கி செயல்படுங்கள், நம்மால் முடிந்தவரை கட்டுப்படுத்துங்கள் புதிய மற்றும் எளிதான தீர்மானங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.... நம் மீது அன்பாகவும் மென்மையாகவும் இருக்கும் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார்... 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள்! என தெரிவித்துள்ளார் இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.