திருமணத்துக்கு பின்னர் பெயரை மாற்றிய சமந்தா? இனி டைட்டில் கார்டில் இந்த பெயர்தானாம்...!
நடிகை சமந்தா ருத் பிரபு 'மா இன்டி பங்காரம்' என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் கார்டில் சமந்தாவின் புதுப்பெயர் இடம்பெற இருப்பதாக தகவல்கள் தெரிகிறது.

Samantha Changed Her Name
நடிகை சமந்தா தனது முதல் திருமணத்திற்கு முன்பு வரை அனைத்து திரைப்படங்களிலும் ‘சமந்தா ரூத் பிரபு’ என்ற பெயரில்தான் திரையில் தோன்றினார். நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு, அக்கினேனி குடும்ப மருமகளாக மாறிய சமந்தா, தனது பெயரில் ‘அக்கினேனி’ என்ற குடும்பப் பெயரையும் சேர்த்துக் கொண்டார். சமூக வலைதளங்களிலும் அவர் பெயர் Samatha Ruth Prabhu Akkineni என மாற்றப்பட்டது. ஆனால் அந்த திருமண வாழ்க்கை நீண்ட காலம் நிலைக்கவில்லை.
பெயரை மாற்றும் சமந்தா
நாக சைதன்யா உடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் சமந்தா. இதனால் விவாகரத்து முடிவை அறிவிக்கும் முன்னரே தனது இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து ‘அக்கினேனி’ என்ற குடும்பப் பெயரை நீக்கியது ரசிகர்களிடையே பெரும் சந்தேகத்தை கிளப்பியது. அதன்பின்னர் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து அறிவிக்கப்பட்டதுடன், அக்கினேனி குடும்பப் பெயரிலிருந்து சமந்தா முழுமையாக விலகினார்.
சமந்தா புதுப் பெயர் என்ன?
தற்போது சமந்தா தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். அண்மையில் அவர் பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோரு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது திருமணத்துக்கு பின்னர், நடிகை சமந்தா தனது வரவிருக்கும் திரைப்படத்தில் தனது பெயரை ‘சமந்தா நிடிமோரு’ என மாற்ற இருக்கிறாராம். அந்த பெயர் தான் இனி சமந்தா நடிக்கும் படங்களின் டைட்டில் கார்டில் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரையில் புதுப்பெயர்
சமந்தா கதாநாயகியாக நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தை நந்தினி ரெட்டிஇயக்குகிறார். ராஜ் நிடிமோரு தான் இப்படத்திற்கு கதை எழுதி உள்ளார். இந்த படமே சமந்தா திருமணத்துக்குப் பிறகு நடித்து வெளிவரும் முதல் படம் என்பதால், இப்படத்தில் இருந்து அவரின் பெயர் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

