- Home
- Cinema
- இது அதுல்ல... அஜித் படத்தை காப்பியடித்துள்ளாரா சமந்தா? விமர்சிக்கப்படும் ‘மா இன்டி பங்காரம்’ டீசர்
இது அதுல்ல... அஜித் படத்தை காப்பியடித்துள்ளாரா சமந்தா? விமர்சிக்கப்படும் ‘மா இன்டி பங்காரம்’ டீசர்
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள மா இன்டி பங்காரம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசர் பார்த்த நெட்டிசன்கள் இது அஜித் பட காப்பியா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

‘மா இன்டி பங்காரம்’ டீசர்
சமந்தா ரூத் பிரபு ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகையாக இருந்தவர். ஆனால் சமீபத்தில் உடல்நலப்பிரச்சனை ஏற்பட்டதால் அவருக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இந்தக் காரணத்திற்காகவே அவர் பாலிவுட் வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், ஒரு வருடத்திற்கு முன்பே சமந்தா நடிப்பில் 'மா இன்டி பங்காரம்' படம் அறிவிக்கப்பட்டது. சில காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானது. தற்போது 'மா இன்டி பங்காரம்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் சமந்தா இரண்டு ஷேடுகளில் தோன்றியுள்ளார்.
சமந்தா கொடுக்கும் ட்விஸ்ட்
சமந்தா நடிக்கும் 'மா இன்டி பங்காரம்' படத்தின் டீசர் இன்று (ஜனவரி 09) வெளியானது. இப்படத்தில் சமந்தாவின் கணவராக கன்னட நடிகர் திகந்த் நடித்துள்ளார். டீசரில் காட்டப்பட்டுள்ளபடி, சமந்தாவும் திகந்தும் காதலித்து, வீட்டாருக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொள்கிறார்கள். பின்னர், சமந்தா முதல் முறையாக கணவர் வீட்டிற்குச் செல்கிறார். அது ஒரு கூட்டுக் குடும்பம். அங்குள்ள அனைவரும் மருமகள் எப்படிப்பட்டவர், அவரது குணம் எப்படிப்பட்டது என்று ஆர்வத்துடன் இருக்கிறார்கள். மருமகளின் ஒவ்வொரு அடியும் விமர்சனத்திற்கும், சோதனைக்கும் உள்ளாகிறது. ஆனால் சமந்தாவோ, ஒரு பண்பான மருமகளைப் போல சிரித்த முகத்துடன் அனைவருக்கும் சேவை செய்து, பாராட்டைப் பெறுகிறார்.
சமந்தாவின் ஆக்ஷன் அவதாரம்
ஆனால் சமந்தாவின் இந்த குடும்பப் பெண் அவதாரம் பகலில் மட்டுமே. சமந்தாவுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. டீசரில் காட்டப்பட்டுள்ளபடி, சமந்தா எந்த ஹீரோவுக்கும் சளைத்தவர் இல்லை என்பது போல சண்டையிடுகிறார், வில்லன்களைத் துரத்தித் துரத்தி அடிக்கிறார். புடவை கட்டியிருந்தாலும், காளியைப் போல வில்லன்கள் மீது பாய்ந்து தாக்குகிறார். குத்திக் குத்திக் கொலை செய்கிறார். இந்த சாகசங்கள் அனைத்தும் மாமியார் வீட்டிலேயே நடக்கிறது. வீட்டினர் கண்களில் படாமல் இந்த சாகசங்களை சமந்தா செய்கிறார்.
அஜித் பட காப்பியா?
ஆனால் சமந்தாவின் இந்த ஆக்ரோஷத்திற்கு காரணம் என்ன? சமந்தாவைத் தாக்கும் அந்த ரவுடிகள் யார்? இதையெல்லாம் தெரிந்துகொள்ள படத்தை தான் பார்க்க வேண்டும். டீசரில் கதையின் ஒரு சிறு பகுதி மட்டுமே உள்ளது. படம் விரைவில் திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது. தற்போதைக்கு டீசரைப் பார்த்த சமந்தா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த 'மா இன்டி பங்காரம்' படத்தை நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். சமந்தாவின் கணவர் ராஜ் நிடிமோரு தயாரித்துள்ளார். படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் இது அஜித்தின் வீரம் படம் போல் இருப்பதாக ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.
Female version of veeram 👀#Samantha action sequences 🤯🤯💥💥#MaaIntiBangaaram
pic.twitter.com/zxEIvaveAz— Filmsoul (@Filmsoul001) January 9, 2026
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

