தனது திருமணத்திற்குப் பின் நடிகை சமந்தாவின் முதல் படமான 'மா இன்டி பங்காரம்' குறித்த முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

அண்மையில் நடிகை சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிதிம்புருவுக்கும் திருமணமானது. தனது திருமணத்திற்குப் பின் நடிகை சமந்தாவின் முதல் படம் 'மா இன்டி பங்காரம்'. இந்தப் படத்தில் நடிப்பதுடன் அவரே தயாரிக்கவும் செய்கிறார். இந்நிலையில் சமந்தா ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் இத்திரைப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சமந்தா வெளியிட்டது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனுடன், டீசர் டிரெய்லர் வரும் ஜனவரி 9ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இத்திரைப்படத்தின் டீசர் திரையரங்குகளில் பொங்கலையொட்டி வெளியிடப்பட வாய்ப்பு அதிகம் என சொல்லப்படுகிறது. நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சமந்தாவின் திரிலாலா மூவிங் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. நடிகை சமந்தா தயாரித்து வெளியான சுபம் திரைப்படம் அதிக வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது.