டாப் ஹீரோவுக்கு ஜோடி; ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணிய சாய்பல்லவி.. இது தான் காரணமா?
டாப் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை, நடிகை சாய் பல்லவி நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sai pallavi Movies
கவர்ச்சி காட்டாமல் கூட முன்னணி நடிகையாக மாறலாம் என்பதை நிரூபித்து காட்டியவர் நடிகை சாய் பல்லவி. அதே போல் இவருடைய நளினமான நடன அசைவுகளும், மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பிரேமம் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமான சாய் பல்லவி, தற்போது தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ளார். அமீர்கான் மகனுக்கு ஜோடியாக பாலிவுட் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
Sai Pallavi Pair With Sivakarthikeyan
சாய் பல்லவி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'அமரன்'. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இந்த படத்தை, உலகநாயகன் கமலஹாசன் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார். மேலும் இந்த படத்தில், ராகுல் போஸ், புவன் அரோரா, உள்ளிட்ட பல நடித்திருந்தனர். சென்னையை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, சுமார் 335 கோடி வசூல் சாதனையை படைத்தது.
6 மணி நேரம் லேட்; அதிகார திமிரால் ரசிகர்களை கால்கடுக்க காக்க வைத்த நயன்தாரா!
Amaran Movie
இந்த படத்தில் முகுந்து வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் தான் சாய்பல்லவி நடித்திருந்தார். இவருடைய நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருந்ததாகவும், இப்படத்திற்காக சாய் பல்லவிக்கு தேசிய விருது கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக திரைப்பட விமர்சனங்கள் கூறி வந்தனர். தொடர்ந்து தன்னுடைய சினிமா கேரியரில் தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் சாய் பல்லவி தற்போது பிரபல முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்ததாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
Director Madone Ashwin Movie
இயக்குனர் யோகி பாபுவை வைத்து மண்டேலா திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் மடோன் அஸ்வின். நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் படத்தை இயக்கிய இவர்.. அடுத்ததாக விக்ரமை வைத்து ஊதிய படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது விக்ரம் நடித்து முடித்துள்ள 'வீர தீர சூரன் பார்ட் 2' திரைப்படத்தின் ரிலீஸுக்கு பின்னர் துவங்கப்படும் என கூறப்படுகிறது.
இதெல்லாம் ஏன் கிட்ட வெச்சிக்காத; சவுண்டு கிட்ட சண்டைக்கு போய் கண்ணீர் விட்ட சுனிதா!
Saipallavi Refused To Act Vikram
இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க, நடிகை சாய் பல்லவியை அனுகிய நிலையில்... அவர் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்க நடிகை சாய் பல்லவி தயங்குவதாக ஒரு தரப்பினர் கூறி வந்தாலும், மற்றொரு தரப்பு குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் சாய் பல்லவி கால்ஷீட் காரணமாகவே இந்த படத்தில் நடிக்கவில்லை என கூறப்படுகிறது. விரைவில் சாய் பல்லவி, நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள 'தண்டால்' திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.