- Home
- Cinema
- T. Rajendar Thanks: "பசிக்கு சோறு போட்டவனை மறக்கமாட்டேன்!" - மேடையிலேயே கர்ஜித்த டி.ஆர்! பின்னணியில் இருந்த அந்த மாஸ் நடிகர் யார் தெரியுமா?!
T. Rajendar Thanks: "பசிக்கு சோறு போட்டவனை மறக்கமாட்டேன்!" - மேடையிலேயே கர்ஜித்த டி.ஆர்! பின்னணியில் இருந்த அந்த மாஸ் நடிகர் யார் தெரியுமா?!
வறுமையில் வாடிய டி.ராஜேந்தருக்கு, ஒருவேளை உணவளித்து வாழ்வு கொடுத்தவர் நடிகர் தியாகு. கேப்டன் விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான தியாகு, தன் நண்பனின் பசி தீர்த்த அந்த நெகிழ்ச்சியான நட்பு சரித்திரத்தை இந்தத் தொகுப்பில் விரிவாகக் காண்போம்.

"மாஸ்" மனிதரைப் பற்றித் தெரியுமா?
சினிமாவில் சாதிப்பதற்கு அறிவு மட்டுமே போதும் என்பதை உலகிற்கு நிரூபித்த நபர் டி. ராஜேந்தர். நிறம், பர்ஸ்னாலிட்டி போன்றவை நடிகர்களுக்கு தேவையில்லை அதுவும் ஹீரோ ஆவதற்கு இதெல்லாம் தேவை என்று இருந்த அனைத்தையும் அடித்து உடைத்து தவிடு பொடியாக்கியவர் டி. ராஜேந்தர் என்றால் அது மிகையல்ல. இவர் போட்ட பாட்டுக்கள் அனைத்தும் இன்றும் காதலர்களுக்கு மருந்து.
தமிழ் சினிமாவில் அடுக்குமொழி வசனங்களாலும், அதிரடி இசையமைப்பாலும் ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர் டி. ராஜேந்தர் (டி.ஆர்). இன்று அவர் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஆளுமையாக இருக்கலாம், ஆனால் அவரது கடந்த காலப் போராட்டங்கள் ரத்தமும் கண்ணீரும் கலந்தவை. ஒருவேளை உணவிற்காக அவர் தவித்தபோது, அவருக்குக் கரம் கொடுத்துத் தூக்கிவிட்ட அந்த "மாஸ்" மனிதரைப் பற்றித் தெரியுமா?
தெருவிளக்கு வெளிச்சமும் ஒரு டம்ளர் பாலும்!
டி.ஆர் தனது போராட்டக் காலங்களைச் சொல்லும்போதெல்லாம் உணர்ச்சிவசப்படாமல் இருந்ததில்லை. சென்னையில் வாய்ப்பு தேடி அலைந்தபோது, தங்குவதற்கு இடமின்றி தெருவிளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பாராம். அந்தச் சமயத்தில், பசியால் வாடிய டி.ஆருக்குத் தொடர்ந்து பால் மற்றும் உணவு கொடுத்து, ஒரு தாயைப் போலப் பாதுகாத்தவர் நடிகர் தியாகு. இவர் விஜயகாந்தின் நெங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. "தியாகு இல்லையென்றால் இன்று இந்த டி.ஆர் இல்லை. என் காய்ந்த வயிற்றுக்கு சோறு போட்ட அந்தத் தியாகுவின் கைகளை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்!" எனப் பல மேடைகளில் டி.ஆர் கர்ஜித்துள்ளார்.
வசதியான குடும்பம்.. ஆனால் கையில் காசில்லை!
இந்த உதவி குறித்து நடிகர் தியாகு ஒரு நேர்காணலில் அதிரடியான சில உண்மைகளைப் பகிர்ந்துள்ளார். "எங்கள் வீடு வசதியான வீடுதான், ஆனால் நான் சென்னை வந்தபோது கையில் ஒரு நூறு ரூபாய் கூட இல்லை. ஒருவேளை உணவோடு சுற்றிய காலங்கள் உண்டு. அந்த வலி எனக்குத் தெரியும், அதனால்தான் என்னால் டி.ஆருக்கு உதவ முடிந்தது," என்கிறார் தியாகு.பணம் இன்று வரும் நாளை போகும், ஆனால் இக்கட்டான சூழலில் செய்த உதவியை டி.ஆர் இன்றும் நினைவில் வைத்திருப்பதுதான் உண்மையான நட்பு என அவர் நெகிழ்கிறார்.
கேப்டன் விஜயகாந்தின் நிழல்!
நடிகர் தியாகு, டி.ஆருக்குப் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல; மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மிக நெருங்கிய நண்பரும் கூட. விஜயகாந்தின் பல வெற்றிப் படங்களில் தியாகுவின் பங்களிப்பு உண்டு. டி.ஆருக்கு வாழ்க்கையைக் கொடுத்த தியாகு, கேப்டனின் நிழலாகவும் இருந்து தமிழ் சினிமாவில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் முத்திரை பதித்துள்ளார்.
நட்பின் இலக்கணம் டி.ஆர்
புகழின் உச்சிக்குச் சென்ற பிறகு, தியாகுவை மறந்துவிடவில்லை. மாறாக, தனது படங்களில் அவருக்கு முக்கியத்துவமும், கேப்டன் விஜயகாந்தின் 'கூலிக்காரன்' போன்ற படங்களுக்கு இசையமைத்தபோதும் அந்த நட்பைப் போற்றினார்.
நட்பைக்கூட கற்பை போல எண்ணுவோம்
வெற்றிக் கோபுரத்தில் அமர்ந்திருக்கும்போது பல நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால், ஒருவேளை உணவுக்கு வழியில்லாதபோது கைகொடுப்பவனே உண்மையான நண்பன் என்பதற்கு டி.ஆர் - தியாகுவின் நட்பு ஒரு ஆகச்சிறந்த உதாரணம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

