MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய்காக பிரபல ஹீரோயினுடன் சண்டைக்கு சீறிய த்ரிஷா - இந்த கதை தெரியாம போச்சே?

விஜய்காக பிரபல ஹீரோயினுடன் சண்டைக்கு சீறிய த்ரிஷா - இந்த கதை தெரியாம போச்சே?

Trisha Clashed with a Popular Heroine: நடிகை த்ரிஷா முன்னணி நடிகையாக இருந்த ஆரம்ப காலத்திலேயே, தொடர்ந்து விஜய்க்கு ஜோடி போட்டு வந்த நடிகையிடம் முட்டி மோதிய தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

3 Min read
Author : Rsiva kumar
Published : May 03 2026, 11:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
24 ஆண்டுகளாக கதாநாயகி:
Image Credit : Instagram

24 ஆண்டுகளாக கதாநாயகி:

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தென்னிந்திய திரைப்பட உலகிலும் கடந்த 24 ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து வருகிறார். அதேபோல் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். இவர் கதையின் நாயகியாக நடித்த படங்கள் இவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை என்றாலும், 96, பொன்னியின் செல்வன், லியோ போன்ற படங்கள் இவரை மீண்டும் லைம் லைட்டிற்கு கொண்டு வந்தது.

28
 புரட்டி போட்டது தக் லைப்:
Image Credit : instagram /@trishakrishnan

புரட்டி போட்டது தக் லைப்:

காலம் மாறினாலும், புதிய தலைமுறை நடிகைகள் அடுத்தடுத்து வந்தாலும், தனது இடத்தை இழக்காமல் தொடர்ந்து முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருப்பது அவரது திறமைக்கும், தேர்வுகளுக்கும் சான்றாகும். பொன்னியின் செல்வன் படத்தில் இவர் குந்தவையாக நடித்து பெற்ற பாராட்டுகளை எல்லாம் புரட்டி போட்டது தக் லைப் திரைப்படம். இந்த படத்தில் சுகர் டாடியாக நடிக்க, அவரை விரும்பும் ரோலில் தான் த்ரிஷா நடித்திருந்தார். மேலும் இந்த படம் பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளானது.

38
புதிய படங்கள்:
Image Credit : instagram /@trishakrishnan

புதிய படங்கள்:

இதை தொடர்ந்து, தற்போது த்ரிஷா கருப்பு, விஸ்வம்பரா, ராம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக தயாராக உள்ளன. அதேபோல் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் சித்தார்த் உடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இது அவரின் கரியரில் இன்னொரு சுவாரஸ்யமான படைப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

48
த்ரிஷா - விஜய்:
Image Credit : X

த்ரிஷா - விஜய்:

திரையுலக வாழ்க்கை த்ரிஷாவுக்கு ஜோராக சென்று கொண்டிருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் தான் அடிக்கடி பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். குறிப்பாக விஜய் அரசியலில் நுழைந்த பின்னர், த்ரிஷா - விஜய் பற்றிய வதந்திகளும் பேச்சுகளும் அதிகரித்துள்ளதை பார்க்க முடிகிறது. இத்தகைய சூழலில் தான் விஜய்காக ஆரம்ப காலகட்டத்திலேயே பிரபல நடிகையுடன் த்ரிஷா சண்டைக்கு சீறிய தகவல் வெளியாகி உள்ளது.

58
அசின் மற்றும் த்ரிஷா:
Image Credit : our own

அசின் மற்றும் த்ரிஷா:

அதாவது த்ரிஷா - அசின் இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமானவர்கள். ஆரம்ப காலத்திலேயே தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகைகளாக உயர்ந்தனர். ரசிகர்களிடமும், இயக்குநர்களிடமும் இருவருக்கும் சமமான வரவேற்பு இருந்தது. அந்த காலத்தில் அசின் மற்றும் த்ரிஷா இருவரும் முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்ததால், அவர்களுக்கு இடையே போட்டி மற்றும் மோதல் உள்ளது என்ற பேச்சு பரவியது. குறிப்பாக, விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் த்ரிஷா நடித்ததும், அதற்குப் பிறகு வந்த சிவகாசி படத்தில் அசின் நடித்ததும் இந்த பேச்சுகளை மேலும் தூண்டியது. ஒருகட்டத்தில் அசின் அடுத்தடுத்து விஜய்யுடன் போக்கிரி, காவலன் போன்ற படங்களில் நடித்ததால் த்ரிஷா இவருடன் நேரடியாக சண்டை போட்டதாகவும் கூறப்பட்டது.

68
வதந்திகள் குறித்து த்ரிஷா:
Image Credit : instagram

வதந்திகள் குறித்து த்ரிஷா:

ஆனால், அசின் பின்னர் பாலிவுட் திரையுலகில் கவனம் செலுத்தி, அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார். இதனால் அவர்களுக்கிடையேயான மோதல் பற்றிய பேச்சுகளும் மெதுவாக குறைந்துவிட்டன.

இந்த நிலையில், இந்த வதந்திகள் குறித்து த்ரிஷா நேரடியாக ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, “அசினுடன் எனக்கு எந்த விதமான மோதலும் இல்லை. அது முழுக்க முழுக்க வதந்தி மட்டுமே. அசின் மட்டும் அல்ல, எந்த நடிகைகளுடனும் எனக்கு சண்டை ஏற்பட்டதே இல்லை,” என்று தெளிவாக தெரிவித்துள்ளார்.

78
 தனிப்பட்ட விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை:
Image Credit : instagram

தனிப்பட்ட விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை:

மேலும், அவர் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் பகிர்ந்துள்ளார். “வர்ஷம் படத்திற்காக நான் ஃபிலிம்ஃபேர் விருது பெற்ற போது தான் முதன்முறையாக அசினை நேரில் சந்தித்தேன். அப்போது அவர் என்னை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அதற்குப் பிறகும் எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இருந்ததில்லை,” என்று கூறினார். “நாங்கள் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்ததால், எங்களுக்குள் போட்டி இருக்கிறது என்று மீடியா உருவாக்கியது. நான் விஜய் உடன் ஒரு படத்தில் நடித்தால், அடுத்த படத்தில் அசின் நடிப்பார். அதேபோல் மற்ற ஹீரோக்களுடனும் நடந்தது. ஆனால் அதை நான் ஒருபோதும் தனிப்பட்ட விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை,” என்று விளக்கமளித்தார்.

88
 த்ரிஷா தெளிவுபடுத்தியுள்ளார்
Image Credit : social media

த்ரிஷா தெளிவுபடுத்தியுள்ளார்

இறுதியாக, த்ரிஷா கூறியதாவது, “எங்களுக்குள் எந்த தனிப்பட்ட தொடர்பும் கூட இல்லை. ஆனால் அவர் மிகவும் தொழில்முறை அணுகுமுறையுடன் செயல்படும் ஒருவர்,” என்று அசின் குறித்து பாராட்டியும் பேசினார். மொத்தத்தில், பல ஆண்டுகளாக பரவி வந்த இந்த மோதல் குறித்த பேச்சுகள் உண்மையல்ல என்பதையும், அது வெறும் ஊடகங்கள் மூலம் உருவான ஒரு கற்பனை கதையே என்பதையும் த்ரிஷா தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
திரிஷா
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
விஜய் சேதுபதி
சினிமா
சினிமா காட்சியகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வசூலில் தனுஷ் படத்தை தட்டிதூக்கிய நயன்தாராவின் ‘பேட்ரியாட்’ - முதல் நாளே இத்தனை கோடியா?
Recommended image2
Kara Movie Day 2 Box Office: கலெக்‌ஷன் கிங் ஆக மாறிய ‘கர’சாமி... முதல் நாளைவிட அதிக வசூல் அள்ளி சாதனை
Recommended image3
கொசு சத்தத்தில் இருந்து உருவான TMS பாடல்... எவர்கிரீன் ஹிட் அடித்த கதை தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved