நடிகை ரீமாசென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா? 10 ஆவது பிறந்தநாளில் கியூட் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த, ரீமா சென் தன்னுடைய மகனின் பத்தாவது பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கியூட் புகைப்படங்களை வெளியிட, ரீமா சென் மகனுக்கு ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கொல்கத்தாவைச் சேர்ந்த, மாடலான நடிகை ரீமா சென் தெலுங்கு திரையுலகில் 'சித்திரம்' என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர். இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'மின்னலே' திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே தன்னுடைய அழகால் ரசிகர்களைக் கவர்ந்த ரீமா சென்னுக்கு அடுத்த டுத்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் படு பிசியாக நடித்து வந்த இவர்... கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களை தேர்வு செய்து நடித்தார். அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியனா, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன், திமிரு, பகவதி, போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
தலைகீழா தொங்கவிட்டு... சைலண்டாக சம்பவம் செய்யும் செல்வராகவன்! அதிர வைக்கும் 'பகாசூரன்' ஸ்னீக் பீக்!
முன்னணி நடிகையாக இருக்கும் போதே... கடந்த 2012 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஷிவ் கரன்சிங் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து ஒரேயடியாக விளக்கிய ரீமாசென், சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
அவ்வப்போது தன்னுடை தோழிகள், மற்றும் கணவர், குழந்தைகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
பல வருடம் கழித்து முதல் மகனை சந்தித்த பிக்பாஸ் தாமரை..! உச்சகட்ட மகிழ்ச்சியில் வெளியிட்ட புகைப்படம்!
அந்த வகையில் தற்போது தன்னுடைய மகனின் 10-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சில க்யூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.