பல வருடம் கழித்து முதல் மகனை சந்தித்த பிக்பாஸ் தாமரை..! உச்சகட்ட மகிழ்ச்சியில் வெளியிட்ட புகைப்படம்!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான தாமரைச்செல்வி, தன்னுடைய முதல் மகனை பல வருடங்களுக்கு பின் சந்தித்த புகைப்படத்தை தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட, அது வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மக்களுக்கு பரிச்சயமான முகங்களை விட புது முக போட்டியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் முக்கியமான போட்டியாளர், கூத்துப்பட்டறை பின்னணியில் இருந்து வந்த தாமரைச்செல்வி.
மிகவும் வெள்ளந்தியாக, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் வந்த ஓரிரு வாரங்களிலேயே வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாமர்த்தியமாக விளையாடி 90 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்தார்.
முயற்சித்தும் நிறைவேறாமல் போன மயில்சாமியின் ஆசை..! வேதனையோடு டெல்லி கணேஷ் பகிர்ந்த தகவல்!
மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த தாமரை செல்விக்கு, ஏகப்பட்ட கடன்கள் இருந்தும் பிக்பாஸ் கொடுத்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்லாமல், நின்று விளையாடியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து சாமர்த்தியமாக விளையாடி அசத்தினார்.
தற்போது சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் பிக்பாஸ் தாமரை செல்வி, பல வருடங்களுக்கு பின்னர் தன்னுடைய முதல் மகனுடன் சேர்ந்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பிக்பாஸ் தாமரை செல்வியை, அவரது குடும்பத்தினர் ஏற்கனவே திருமணம் ஆன ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அவர் மூலம், தாமரைக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு, இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
எனினும் தாமரையின் முதல் மகனை அவரது கணவர் இவரை விட்டு பிரித்து விட்டதால், தன்னை பற்றி தன்னுடைய முதல் மகன் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று, கண்ணீரும் கமலையுமாக அவர் பேசியது பலரது நெஞ்சங்களை நெகிழ வைத்தது. பல போட்டியாளர்கள் கண்டிப்பாக ஒரு நாள் உங்களின் முதல் மகன் உங்களை வந்து சந்திப்பார் என ஆறுதல் கூறினர்.
இந்நிலையில், பல வருடங்களுக்கு பின்னர், தாமரை செல்வியின் முதல் மகன் சிவா, அவரை வந்து சந்தித்துள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தை மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தாமரை தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.