“அட்லி என்னை நம்ப வைச்சு ஏமாத்திட்டாரு..” நடிகை பிரியாமணி சொன்ன தகவல்..
ஹிந்தித் திரையுலகில் மிக வேகமாக ரூ.300 கோடி வசூல் செய்து புதிய சாதனையை படைத்தது,
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜவான் அடம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. தமிழில் விஜய்யை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த அட்லி ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் ஜவான் படம் ஹிந்தித் திரையுலகில் மிக வேகமாக ரூ.300 கோடி வசூல் செய்து புதிய சாதனையை படைத்தது,
இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர் விஜய் ஜவான் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக ரிலீஸுக்கு முன்பே பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், படம் வெளியான பிறகு அந்த தகவல் பொய் என்பது உறுதியானது. விஜய் அந்த படத்தில் நடிக்கவில்லை.
இந்த நிலையில் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள பிரியா மணி இயக்குனர் அட்லி தன்னை ஏமாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் பேட்டியளித்த ப்ரியா மணி, ஷாருக்கானுடன் இணைந்து இந்த படத்தில் நடிகர் விஜய்யும் நடிப்பதாக அட்லி என்னிடம் தெரிவித்தார். இதனால் மிகுந்த உற்சாகமடைந்த நன, விஜய்யுடன் ஒரு சில காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன், அதற்கு அட்லீ ஒப்புக்கொண்டார்.” என்று தெரிவித்தார்
ஆனால், படப்பிடிப்பின் போது, ஜவான் படத்தில் விஜய் நடிக்காதது குறித்து பிரியாமணி தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தனர். இப்படி தான் அட்லி என்னை ஏமாற்றினார் என்று பிரியாமணி அட்லியை கிண்டல் செய்யும் விதமாக பேசியுள்ளார்.
நடிகை பிரியா மணி ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். அந்த பாடலில் தன்னை ஷாருக்கானை பின்னணியில் ஆட வைக்க ஷோபி மாஸ்டர் முடிவு செய்ததாகவும், ஷாருக்கான் தான் தன்னை அவரின் ஆட வைத்ததாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.