சாகும் வரை நோயோடு போராட வேண்டும்! சமந்தாவை தொடர்ந்து அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட பூனம் கவுர்..!
நடிகை சமந்தாவை தொடர்ந்து, மற்றொரு நடிகை அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாழ்நாள் முழுக்க இந்த நோயுடன் போராட வேண்டும் என அவர் கூறியுள்ளது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, மயோசிட்டிஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டதாக கூறியதை தொடர்ந்து, தற்போது அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார். நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாகி கொண்டே செல்லும் நிலையில்... மேல் சிகிச்சைக்காக தென் கொரியா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமந்தா வெளிப்படையாக தன்னுடைய பிரச்சனை குறித்து அறிவித்த பின்னர், மற்ற சில நடிகர் - நடிகைகளுக்கும் தங்களுக்குள்ள பிரச்னையை தெரிவித்து வரும் நிலையில், பிரபல நடிகை பூனம் கவுர் ஃபைப்ரோமியால்ஜியா என்கிற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிவித்துள்ளார்.
தனுஷ் - ஐஸ்வர்யா பிரச்சனைக்கு இவர் தான் காரணமா? விவாகரத்துக்கு பின் ஒரேயடியாக நடிகையின் கட்டுப்பாட்டில் நடிகர்
தமிழில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற, 'நெஞ்சிருக்கும் வரை' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். , இவருடைய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து உன்னை போல் ஒருவன், பயணம், வெடி, ஆறு மெழுகுவத்திகள், போன்ற சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் கடைசியாக 'நந்து என் நண்பன்' என்கிற படம் வெளியான நிலையில், இதன் பின்னர் திடீரென திரையுலகில் இருந்து விலகி எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தால். தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்னர் தெலுங்கில் ஒரே ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் அல்லு அர்ஜூனின் ப்ளாக்பஸ்டர் படமான ‘புஷ்பா- தி ரைஸ்’ படத்தின் ட்ரைலர் ரஷ்ய மொழி வெளியானது!
இந்நிலையில் இவர் ஃபைப்ரோமியால்ஜியா என்ற நோயால் வருவது நோயால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது பரவலான தசை கூட்டு வலியுடன் கூடிய நோய் என்றும், இதனால் பாதிக்கப்பட்டவருக்கு சோர்வு, தூக்கம், நினைவாற்றல் மற்றும் மனநிலை பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நோய்க்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தாலும், இதனால் பாதிக்கப்பட்டவர் வாழ்நாள் முழுவதும் இந்த நோயுடன் போராட வேண்டி இருக்குமாம். மேலும் கடந்த இரண்டு வருடங்களாக இந்த அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட பூனம் கவுர் மிகுந்த உடல் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதுகுறித்த தகவல் வெளியாகவே... ரசிகர்கள் பூனம் கவுர் தைரியமாக இருக்கும் படி ஆறுதல் கூறி வருகிறார்கள்.