Rithika: கணவரை கட்டிப்பிடித்து காதலில் உருகும் குக் வித் கோமாளி ரித்திகா..! வெட்டிங் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்..!
விஜய் டிவி ரித்திகா, தன்னுடைய கணவருடன் நெருக்கமாக எடுத்து கொண்ட வெட்டிங் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
விஜய் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்குமே ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர்... அதிகம் டி.ஆர்.பி-யை பெற்று வரும் ரியாலிட்டி ஷோ என்றால் அது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான். சமையல் கலையில் நிபுணர்களாக இருக்கும், கின்னஸ் ரெகார்ட்டு வின்னர் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக உள்ளனர்.
ரக்ஷன் மிகவும் கலகலப்பாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிவருகிறார். இந்த நிகழ்ச்சியில்... ஒவ்வொரு சீசனுக்கு கலந்து கொண்டு விளையாடும் பிரபலங்கள் மக்கள் மத்தியில் மிகவும் எளிதில் இடம் பிடித்து வருவதால்... பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள பல பிரபலங்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
'தங்கலான்' படத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படுகிறாரா முன்னணி நடிகை? வெளியான அதிர்ச்சி தகவல்!
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர், சீரியல் நடிகை ரித்திகா. இவர் ஏற்கனவே சில சீரியல்களில் நடித்திருந்தாலும், இவரை ரசிகர்கள் மனதில் மிகவும் பிரபலமடைய செய்தது என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அதே போல்... தற்போது பாக்கிய லட்சுமி தொடரில் எழிலுக்கு ஜோடியாக அமிர்தா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
இவருடைய திருமணம் சமீபத்தில் மிகவும் எளிமையான முறையில் கோவிலில் நடந்த நிலையில், அதன் பின்னர் திருமண வரவேற்பு மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இதில், விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். தற்போது தன்னுடைய கணவர் வினுவுடன் இவர் எடுத்து கொண்டுள்ள சில ரொமான்டிக் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.