'தங்கலான்' படத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படுகிறாரா முன்னணி நடிகை? வெளியான அதிர்ச்சி தகவல்!
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான்' படத்தில் இருந்து, பிரபல முன்னணி நடிகையை வெளியேற்ற இயக்குனர் பா.ரஞ்சித் முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித் கடைசியாக இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றாலும், வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் தற்போது 'பொன்னியின் செல்வன்' பட நாயகன் விக்ரமுடன் கைகோர்த்துள்ளார்.
கே ஜி எஃப் படத்தை போன்று... தங்கம் எடுக்கும் தொழிலாளர்களை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் விக்ரம், இதுவரை எந்த படத்திலும்... நடித்திராத வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார்.
'நந்தன்' படத்திற்காக புதிய அவதாரம் எடுத்த சசிகுமார்..! மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!
இந்த படத்திற்காக மிகப்பெரிய தாடி மற்றும் மீசையுடன் விக்ரம், நடித்த கிலிப்ஸி வீடியோ ஒன்று சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் சமீபத்தில் வெளியாகி வைரலான நிலையில் இந்த படத்தின் கிலிப்ஸி வீடியோவும் தீபாவளி தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மிகவும் விறுவிறுப்பாக உருவாகி வரும் இந்த படத்தில், நடிகை பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் இருந்து பிரபல நடிகை நீக்கப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
'தங்கலான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மாளவிகா மோகன், படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற போல் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தவில்லை என்றும், இதனால் இந்த படத்தில் இருந்து இவரை நீக்க பா.ரஞ்சித் முடிவு செய்துள்ளதாகவும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.
ஆனால் இப்படி வெளியாகும் தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. வழக்கம்போல் இது வதந்தியா? அல்லது உண்மையிலேயே பா ரஞ்சித் படத்தில் இருந்து மாளவிகா மோகனன் நீக்கப்பட உள்ளாரா? என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.