'நந்தன்' படத்திற்காக புதிய அவதாரம் எடுத்த சசிகுமார்..! மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!

நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படமான 'நந்தன்' படத்தில் இதுவரை ஏற்று நடித்திராத புதிய கெட்டப்பில் நடிக்கிறார் சசிகுமார். இதுகுறித்த புதிய போஸ்டர் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

sasikumar starring nandhan movie first look released

இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, 'நந்தன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகரும், தமிழ் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

sasikumar starring nandhan movie first look released

'கத்துக்குட்டி' , ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'நந்தன்'. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக்பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ் சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

'வாரிசு' வெளியீட்டுக்கு நடக்கும் பிரமாண்ட ஏற்பாடுகள்! இது வெறும் ஆரம்பம் தான் கண்ணா.. வெளியான மாஸ் வீடியோ!

sasikumar starring nandhan movie first look released

யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவரை செய்திராத கெட்டப் சேஞ்சில் சசிகுமாரின் தோற்றம் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது.

என்ன செஞ்சாலும் வேலைக்கு ஆகவில்லை... ரசிகர்களின் மூன்று ஃபேவரட் சீரியல்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios