என்ன செஞ்சாலும் வேலைக்கு ஆகவில்லை... ரசிகர்களின் மூன்று ஃபேவரட் சீரியல்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி.!
டி.ஆர்.பி-யில் தொடர்ந்து மண்ணை கவ்வி வரும் மூன்று முக்கிய சீரியல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விஜய் டிவி தரப்பு முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அந்த சீரியலின் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், அனைத்து தொடர்களுமே ரசிகர்களுக்கு மிகவும் ஃபேவரட் என்றாலும், டி.ஆர்.பி ரேட்டிங்கை பிடிப்பதற்காக சன், மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளும் அவ்வப்போது புது புது சீரியல்களை இறக்குமதி செய்து வருகிறது.
இந்நிலையில், கடந்த வார டி.ஆர்.பி ரேட்டிங் தகவல் படி, முதல் நான்கு இடங்களை சன் டிவி தொடர்கள் தான் பிடித்திருந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி தொடர் 5ஆவது இடத்திலும், அடுத்தடுத்த இடங்களில், பாரதி கண்ணம்மா, ஈரமான ரோஜாவே, மற்றும் ஜீ தமிழ் தொடர்கள் இருந்தன.
துணிவு லுக்கிருக்கு எண்டு கார்டு..! மாஸ்ஸான நியூ லுக்கில் அஜித்..! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..
டி.ஆர்.பி-க்கான போட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில்... தொடர்ந்து டி.ஆர்.பி ரேட்டிங்கை எட்டி பிடிக்க முடியாத மூன்று சீரியல்களை நிறுத்த தற்போது விஜய் டிவி தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி... நம்ம வீட்டு பொண்ணு, காற்றுக்கென்ன வேலி, மௌன ராகம் 2, ஆகிய சீரியல்கள் விரைவில் நிறுத்தப்பட உள்ளதாரம்.
இந்த மூன்று சீரியல்களும்... டி.ஆர்.பி ரேட்டிங்கை பிடிக்கவில்லை என்றாலும் இந்த சீரியலை விரும்பி பார்த்து வரும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் பாரதி கண்ணம்மா தொடரும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதிய காலத்தைகளத்தில் புதிய சீரியல்கள் உதயமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.