கல்யாண கலை வந்துருச்சோ.. மஞ்சள் நிற சேலையில் தங்க சிலை போல் மின்னும் பூஜா ஹெக்டே.. நியூ கிளிக்ஸ்!
நடிகை பூஜா ஹெக்டே மஞ்சள் நிற புடவையில் எடுத்த போட்டோஷூட் படங்களை அவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மிஷ்கின் இயக்கிய "முகமூடி" படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.. இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், அவருக்கு தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
"ஓக லைலா கோசம்" என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான பூஜா ஹெக்டே, தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்தார். மேலும் ஹ்ரித்திக் ரோஷனின் "மொஹென்ஜதாரோ" படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். துரதிர்ஷ்டவசமாக, இப்படம் தோல்வியடைந்ததால், அவரின் பாலிவுட் ஆசைகள் தகர்ந்தது.
மாடர்ன் சிலுக்காக மாறி... டாப் ஆங்கிளில் டபுள் டோஸ் கவர்ச்சி காட்டி கிக் ஏற்றும் சாக்ஷி அகர்வால்
இருப்பினும், பூஜா ஹெக்டே தென்னிந்திய சினிமாவில் அல்லு அர்ஜுனின் "டிஜே" மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். தன்னை ஒரு முன்னணி நடிகையாக நிலைநிறுத்திய அவர், பல உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்தார். ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், பிரபாஸ், விஜய், என பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார்..
கடந்த ஆண்டு வெளியான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அனைவரையும் ஈர்த்திருப்பார். மேலும் "ஹவுஸ்ஃபுல் 4" மூலம் மீண்டும் பாலிவுட்டிலும் தடம் பதித்தார். தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார். பூஜா ஹெக்டே.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, அவ்வப்போது தனது போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற புடவையில் எடுத்த போட்டோஷூட் படங்களை அவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படங்களுக்கு லைக்குள் குவிந்து வருகின்றன.
புகை மூட்டத்தில் ஒரு வண்ண மயில் - குறைவான கிளாமரில்.. யாஷிகா வெளியிட்ட லைட் ஹாட் போட்டோஷூட்!
முன்னதாக நேற்று மும்பையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை பூஜா ஹெக்டே திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பூஜா இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்போ, விளக்கமோ எதுவும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே நடிகர் மகேஷ் பாபுவின் புதிய படத்தில் நடிக்க கமிட்டான பூஜா ஹெக்டே, தனது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.