Nayanthara : போட்டோ எடுத்தா போனை உடைச்சிடுவேன்... ரசிகரிடம் கடிந்துகொண்ட நயன்தாரா
குல தெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று கும்பகோணம் சென்றிருந்த நயன்தாரா அங்கு போட்டோ எடுத்தவர்களிடம் கடிந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை நயன்தாரா தனது காதல் கணவர் விக்னேஷ் சிவன் உடன் நேற்று காலை சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் சென்றார். பின்னர் அங்கிருந்து கும்பகோணத்தை அடுத்த வழுத்தூரில் உள்ள விக்னேஷ் சிவனின் குல தெய்வ கோவிலில் இருவரும் சாமி தரிசனம் செய்தனர். அப்போது நயன்தாரா அங்கு வருவது தெரிந்ததும் அப்பகுதி மக்கள் அந்த கோவிலில் சூழ்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அதேபோல் நயன்தாராவை வீடியோ எடுக்க செய்தியாளர்களும் அங்கு வந்திருந்தனர். இதையடுத்து அங்கு போலீசார் வந்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் விக்னேஷ் சிவன் அங்கிருந்தவர்களிடம் சிறிது நேரம் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் நயன்தாராவும் வந்து, ப்ளீஸ் தயவு செஞ்சு சாமி கும்பிட விடுங்க என வேண்டுகோள் விடுத்தார். அதன்பின் இருவரும் சாமிதரிசனம் செய்தனர்.
பின்னர் அங்கிருந்து கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு சென்றார் நயன்தாரா. அங்கு 12.30 மணிக்கெல்லாம் நடை அடைக்கப்பட்டு பின்னர் 4 மணிக்கு தான் திறக்கப்படும். ஆனால் நேற்று நயன்தாரா 1.30 மணிக்கு வருகை தந்ததை அடுத்து அவருக்காக கோவிலின் பிரதான நுழைவாயில் கதவு திறக்கப்பட்டு அவரை உள்ளே தரிசனம் செய்ய அனுமதித்தனர்.
இதையும் படியுங்கள்... Watch : ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்ட நயன்-விக்னேஷ் சிவன் தம்பதி! திருச்சி ரயில் நிலையத்தில் குவிந்த கூட்டம
இதையடுத்து காரில் திருச்சி சென்ற நயன்தாரா, அங்கிருந்து ரெயில் மூலம் சென்னை செல்வதற்காக திருச்சி ரெயில் நிலையம் வந்திருந்தார். அப்போது அவர் அங்கு வந்திருப்பது தெரிந்ததும் அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செல்பி எடுக்கத் தொடங்கினர். பின்னர் அவர்களை போலீசார் பத்திரமாக அழைத்துச் சென்று ரெயிலில் ஏற்றிவிட்டனர்.
நடிகை நயன்தாரா ரெயிலில் ஏறியபோது அங்கிருந்த ரசிகர் ஒருவர் அவரை செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து டென்ஷன் ஆன போட்டோ எடுத்தா போனை உடைச்சிடுவேன் என கோபத்தில் கத்தினார். இதனால் ஷாக் ஆன அந்த ரசிகர் உடனே வீடியோ எடுப்பதை நிறுத்திவிட்டார். இச்சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையும் படியுங்கள்... கும்பகோணத்தில் உள்ள குல தெய்வம் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த விக்கி - நயன்... என்ன காரணம் தெரியுமா?