கும்பகோணத்தில் உள்ள குல தெய்வம் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த விக்கி - நயன்... என்ன காரணம் தெரியுமா?
கும்பகோணம் அருகே உள்ள வழுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள குலதெய்வம் கோவிலில் வழிபாடு செய்ய விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி சென்றிருந்தனர்.
தமிழ் திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது நீண்ட நாள் காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த அக்டோபர் மாதம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. வாடகைத் தாய் முறையில் அந்த குழந்தைகளை இருவரும் பெற்றுக்கொண்டனர். அந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயரிட்டுள்ளதாக அண்மையில் அறிவித்தனர்.
இந்நிலையில், நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் இன்று கும்பகோணத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்றனர். கும்பகோணத்தை அடுத்த வழுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள விக்னேஷ் சிவனின் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல இருவரும் இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்திருந்தனர். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... பிறந்தநாள் அதுவுமா இப்படி ஏமாத்திட்டீங்களே..! ‘புஷ்பா 2’ படக்குழுவை திட்டித்தீர்க்கும் ராஷ்மிகா ரசிகர்கள்
அவர்கள் இருவரும் கடைசியாக திருமணத்திற்கு முன் ஜோடியாக குல தெய்வம் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்துவிட்டு சென்றனர். அதன்பின்னர் இருவருமே குலதெய்வம் கோவிலுக்கு செல்லவே இல்லை. இதனிடையே சமீபத்தில் விக்னேஷ் சிவனுக்கு ஏகே 62 பட வாய்ப்பு பறிபோனது. அதேபோல் நயன்தாராவுக்கும் அவர் நடிக்க கமிட் ஆகி இருந்த இரண்டு படங்கள் கைநழுவி போயின. இதுதவிர அவர்கள் தயாரிப்பதாக இருந்த ஊர்க்குருவி படமும் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்றது.
இப்படி தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வருவதால் இருவரும் குல தெய்வம் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடிவெடுத்து இன்று திடீரென சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்து, பின்னர் அங்கிருந்து காரில் கும்பகோணத்தை அடுத்த வழுத்தூர் கிராமத்துக்கு சென்றனர். விமான நிலையத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியை பார்த்த ரசிகர்கள் அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதையும் படியுங்கள்... கிச்சா சுதீப் உள்பட முன்னணி கன்னட நடிகர்களை தட்டித்தூக்கிய பாஜக... கர்நாடக தேர்தல் களத்தில் திடீர் டுவிஸ்ட்