இணையத்தில் தீயாய் பரவிய தமிழ் நடிகையின் அந்தரங்க வீடியோ.! போலீசில் புகார்
அஜித், விக்ரம், கமலஹாசன் போன்ற தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகையின் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோவை பகிர வேண்டாம் என நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாய்ப்புகள் இல்லாமல் இருந்த கிரண்
அஜித் நடிப்பில் வெளியான ‘வில்லன்’, பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘வின்னர்’, விக்ரம் நடித்த ‘ஜெமினி’, கமலஹாசனின் ‘அன்பே சிவம்’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை கிரண் ரத்தோட். கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். தனக்குக் கிடைத்த அக்கா, அத்தை போன்ற கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்தார். சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் அவர் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மிக கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இருப்பினும் அவருக்கு பெரிய அளவிலான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
கிரண் பற்றிய சர்ச்சைகள்
அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் இருந்தாலும், மறுபுறம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தார். இது மட்டுமல்லாமல் சப்ஸ்கிரைபர் ஒன்லி பிளான்களை அறிமுகம் செய்து அவருடைய எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சாட்டிற்காக கட்டணத்தை வசூலித்ததாக தகவல் வெளியானது. இது மட்டும் அல்லாமல் அவர் மீது ஏராளமான வதந்திகளும், சர்ச்சைகளும், சலசலப்புகளும் வந்த வண்ணம் இருந்தன.
ஆபாச வீடியோ குறித்து விளக்கம்
இந்த நிலையில் அவரது ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோ குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, “எனது தனி உரிமையையும், மரியாதையையும் குறைக்கும் வகையில் போலியாக மார்ஃபிங் செய்யப்பட்ட ஒரு வீடியோ பரவுகிறது. இது பற்றி சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்" எனக் கூறியுள்ளார்.
Actress Kiran
இந்த வீடியோவை பகிர்வது, பதிவிறக்கம் செய்வது அல்லது பிறருக்கு அனுப்புவது தவறானது மற்றும் இந்திய சட்டத்தின் படி குற்றமாகும். அவ்வாறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயலாம். எனவே பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என கிரண் கேட்டுக்கொண்டுள்ளார்.