கில்லி படத்தில் த்ரிஷாவுக்கு பதில் நான் நடிச்சிருந்தேனா அதிகமா ஃபேமஸாயிருப்பேன்: கிரண்!
Kiran Rathod Talk About Thalapathy Vijay's Ghilli Movie Trisha Role : கில்லி படத்தில் த்ரிஷாவிற்கு பதில் நான் நடித்திருந்தேன் என்றால் ஃபேமஸாகியிருப்பேன் என்று நடிகை கிரண் ஓபனாக பேசி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
Villain Movie, Kiran Rathod Talk About Ghilli Movie Trisha Role
Kiran Rathod Talk About Thalapathy Vijay's Ghilli Movie Trisha Role : ஜெமினி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தவர் நடிகை கிரண். இந்தப் படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பு பெறவே தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்றார். அப்படி அவர் நடித்த படம் தான் வில்லன். அஜித்துக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அன்பே சிவம், திவான், பரசுராம், அரசு, தென்னவன் ஆகிய படங்களில் நடித்தார்.
எனினும் ஒரு சில படங்கள் தோல்வியை கொடுக்கவே விஜய்யின் திருமலை படத்தில் வரும் வாடியம்மா சக்கம்மா பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். இதையடுத்து மீண்டும் சினிமாவில் வாய்ப்பு வந்தது. நியூ, ஜின்னா, திமிரு, இது காதல் வரும் பருவம், வசூல், ராஜாதி ராஜா, குரு சிஷ்யன், சகுனி, ஆம்பள, முத்தின கத்திரிக்கா, இளமை ஊஞ்சல் என்று தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வலம் வந்தார்.
Kiran Rathod Tamil Movies, Gemini Movie
கடைசியாக கிரண் நடிப்பில் வெளியான படம் இளமை ஊஞ்சல். அதன் பிறகு ஒரு படத்தில் கூட அவர் நடிக்கவில்லை. இதற்கு காரணம் ஓவர் வெயிட். உடல் எடை கூடிய நிலையில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை. சின்ன சின்ன குணச்சித்திர வேடங்கள் தான் கிடைத்தது. அதையும் ஒரு சில படங்களில் ஏற்று நடித்தார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்தார்.
ஜெய்ப்பூரில் பிறந்து வளர்ந்த கிரண், கல்லூரி படிப்பிற்கு பிறகு மாடலிங் துறையில் நுழைந்தார். இதன் மூலமாக ஹிந்தி பாப் ஆல்பத்தில் பணியாற்றியிருக்கிறார். அப்படியிருக்கும் போது தான் அவருக்கு Yaadein என்ற ஹிந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இந்தப் படத்தின் மூலமாக எல்லா மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்தார்.
Trisha, Kiran Rathod, Kiran Rathod Filmography
இப்போது சினிமா வாய்ப்பு இல்லாமல் ஒரு சில சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். தன்னுடைய வீடு பற்றி கூட ஹோம் டூர் காண்பித்திருந்தார். இந்த நிலையில் தான் தளபதி விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் வந்த கில்லி படத்தில் த்ரிஷாவிற்கு பதிலாக நான் நடிக்க வேண்டியது என்று கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: முதலில் கில்லி படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு தான் வந்தது. அந்தப் படத்தில் த்ரிஷாவிற்கு பதில் நான் நடித்திருந்தால் அதிகளவில் ஃபேமஸ் ஆகியிருப்பேன். ஆனால், அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.
Ghilli Movie
2003 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் திரைக்கு வந்த ஒக்கடு என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் கில்லி. இந்தப் படத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், தாமு, சாய் தீனா, மயில்சாமி, இளவரசு ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை இயக்குநர் தரணி இயக்கியிருந்தார். வித்யாசாகர் தான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். ரூ.8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 2004 ஆம் ஆண்டு திரைக்கு வந்து ரூ.50 கோடி வசூல் குவித்தது.
சூரிக்கு சினிமாவில் நடிக்க நான் தான் வாய்ப்பு வாங்கி கொடுத்தேன்: சிங்கம்புலி!
Ghilli, Thalapathy Vijay
இதையடுத்து கடந்தாண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட இந்தப் படம் ரூ.26.5 கோடி முதல் ரூ.50 கோடி வரையில் வசூல் குவித்திருக்கிறது என்று தகவல் தெரிவிக்கின்றது. படத்தின் கதை மட்டுமின்றி பாடல்களும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. கபடி மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் விஜய் மற்றும் த்ரிஷாவின் சினிமா வாழ்க்கையில் டர்னிங் பாய்ண்டை ஏற்படுத்தியது.