பிரம்மிப்பூட்டும் ஜெய்ப்பூர் அரண்மனையில்... பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஹன்சிகா திருமணம் - வைரலாகும் போட்டோஸ்
நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த முண்டோடா அரண்மனையில் நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது.
பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கோலிவுட்டில் ஹீரோயினாக கலக்கிய நடிகை ஹன்சிகா மோத்வானி, கடந்த மாதம் தனது காதலனை அறிமுகப்படுத்தினார். பாரிஸில் உள்ள ஈஃபில் டவர் முன் காதலனுடன் எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை பகிர்ந்து தனக்கு திருமணம் நடைபெற உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஹன்சிகா.
நடிகை ஹன்சிகாவுக்கும் தொழிலதிபர் சோஹைல் கதூரியாவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து அவர்களது திருமண கொண்டாட்டங்கள் களைகட்டின. நடிகை ஹன்சிகா தனது தோழிகளுக்கு கிரீஸ் நாட்டில் பேச்சிலர் பார்ட்டியெல்லாம் கொடுத்து அசத்தி இருந்தார். அதுகுறித்த போட்டோக்களும் வெளியாகி வைரலாகி இருந்தன.
இதையும் படியுங்கள்... அப்போ வர்மா, இப்போ வணங்கான்! பாலாவை பாதியில் கழட்டிவிட்ட ‘பிதாமகன்’கள்- வணங்கானில் இருந்து சூர்யா விலகியது ஏன்
இந்நிலையில், ஹன்சிகா - சோஹைல் கதூரியா ஜோடியின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த முண்டோடா அரண்மனையில் நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பாரம்பரிய முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் ஹன்சிகா - சோஹைல் கதூரியா இருவரும் சிகப்பு நிற மேட்சிங் மேட்சிங் உடையில் ஜொலித்தனர். அவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... குளு குளு வெண்பனி போல... திருமணத்தில் காதல் கணவருடன் கியூட் போஸ் கொடுத்த ஹன்சிகா