குளு குளு வெண்பனி போல... திருமணத்தில் காதல் கணவருடன் கியூட் போஸ் கொடுத்த ஹன்சிகா
நடிகை ஹன்சிகா தனது கணவர் சோஹைல் கதூரியா உடன் வெள்ளை உடையில் தேவதை போல் மிளிரும் வகையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.
தமிழ் திரையுலகில் தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானவர் ஹன்சிகா. இதையடுத்து விஜய் உடன் வேலாயுதம், சிம்புவுக்கு ஜோடியாக வாலு, விஷாலுடன் ஆம்பள என தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், குறுகிய காலத்திலேயே உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார். இதுவரை இவர் நடிப்பில் 50 படங்கள் வெளியாகி உள்ளன.
இடையே சில ஆண்டுகள் உடல் எடை அதிகரித்ததன் காரணமாக நடிக்காமல் இருந்து வந்த ஹன்சிகா, தற்போது மீண்டும் பிசியாக நடிக்கத்தொடங்கி உள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் பாரிஸின் ஈஃபில் டவர் முன் தனது காதலனை கட்டிப்பிடித்தபடி புகைப்படம் வெளியிட்டு தனது திருமணத்தை அறிவித்தார் ஹன்சிகா.
இதையும் படியுங்கள்... நான் நடிக்கவே இல்ல.. ஏன் மூஞ்சிய எதுக்கு போஸ்டர்ல போடுற! தாதா படக்குழுவை திருப்பி அடிக்கும் யோகிபாபு
அவர் சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்ய உள்ளார். அவர்களது திருமணம் இன்று இரவு ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த முண்டோடா அரண்மனையில் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த இரண்டு நாட்களாக திருமண சடங்குகளும் நடந்து வருகிறது. அதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில், தற்போது நடிகை ஹன்சிகா தனது கணவர் சோஹைல் கதூரியா உடன் வெள்ளை உடையில் தேவதை போல் மிளிரும் வகையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார். அதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வனுக்கு பின் எகிறிய மவுசு... சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய ஜெயம் ரவி - அதுவும் இத்தனை கோடியா?