திருமணம் எப்போது? பிரபாஸ் பற்றி எழுபட்ட கேள்வி..! நடிகை அனுஷ்கா ஓப்பன் டாக்!
நடிகை அனுஷ்கா ஒரு சிறு இடைவெளிக்கு பின்னர், 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் கலந்து கொண்ட அனுஷ்கா, திருமணம் மற்றும் நடிகர் பிரபாஸ் குறித்து பேசி உள்ள தகவல் வைரல் ஆகி வருகிறது.
தெலுங்கு திரை உலகில் அறிமுகமான நடிகை அனுஷ்காவை, தமிழில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் சுந்தர் சி தான். நடிகர் மாதவனை வைத்து இவர் இயக்கிய 'ரெண்டு' படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடித்திருந்தார். முதல் படத்தியிலேயே தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை மிரட்டிய இவரை, அடுத்தடுத்து பல இயக்குனர்கள் தமிழில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டினர். பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடிப்பதிலேயே அனுஷ்கா ஆர்வம் காட்டினாலும், குறிப்பிட்ட சில முன்னணி நடிகர்களுடன் மட்டுமே தமிழில் ஹீரோயினாக நடித்தார். அந்த வகையில் சூர்யா, விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் அனுஷ்கா நடித்துள்ளார்.
முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை தாண்டி, அருந்ததி படத்தில் கதையின் நாயகியாக இவர் நடித்தது, இவருக்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதே போல் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் அனுஷ்கா நடித்த பாகுபலி திரைப்படம், இவரை உலகம் முழுவதும் பிரபலமடைய செய்தது என்றால் அது மிகையல்ல.
40 வயதில் குத்து ரம்யா மாரடைப்பால் மரணம்? திரையுலகை உலுக்கிய வதந்தி..! வெளியான பரபரப்பு தகவல்!
பாகுபலி திரைப்படத்திற்கு பின்னர், "குண்டாக இருக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, 'இஞ்சி இடுப்பழகி' திரைப்படத்தில் நடித்தார்". இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், இவரின் கேரியரையே டோட்டல் டேமேஜ் செய்யும் அளவுக்கு படு மோசமான தோல்வியை தழுவியது. படத்தில் மிகவும் எதார்த்தமான தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, அனுஷ்கா உண்மையிலேயே குண்டாக மாறிய நிலையில், ஏற்றிய எடையை குறையக்க முடியாமல் கடும் அவதி பட்டார்.
மேலும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடும் முடிவில் அனுஷ்கா இருந்த போதிலும்... ஜாதகம், தோஷம் போன்ற காரணத்தால் இதுவரை இவருக்கு திருணம் கைகூடவில்லை என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, தற்போது 41 வயதிலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அதன்படி ஒரு சிறு இடைவெளிக்கு பின்னர் நடிகர் அனுஷ்கா 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள நிலையில், அவரது அனுஷ்காவின் 48வது படமாக உருவாகியுள்ளது.
நடிகை நிரோஷா காவல் நிலையத்தில் கொடுத்த பரபரப்பு புகார்! என்ன ஆச்சு? அதிரடியாக நடிக்கும் விசாரணை!
இந்த படத்தின் ப்ரோமோஷன் பணியில் நடிகை அனுஷ்கா கலந்து கொண்ட போது, பல்வேறு கேள்விகள் இவரிடம் கேட்கப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் பிரபாஸுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு அனுஷ்கா இதற்கான முடிவு என் கையில் இல்லை. எங்களது ஜோடி ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படுகிறது என்பது தெரியும். இதற்கு காரணம் அந்த கதை அம்சம் மற்றும் படத்தொகுப்புகள் போன்றவை தான். எங்கள் இருவருக்கும் கதைகள் உருவாக்கினால் கண்டிப்பாக மீண்டும் இணைந்து நடித்த வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து 41 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது குறித்து, அனுஸ்காவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மிகவும் சாதாரணமாக சிரித்துவிட்டு.. உண்மையாகவே இதற்கு என்ன பதில் சொல்வது என்பது எனக்கு தெரியவில்லை. இயல்பாகவே உரிய நேரத்தில் நடக்க வேண்டும். அதற்கான நேரம் இருக்கிறது அப்போது அது இயல்பாகவே நடக்கும் என பதில் அளித்துள்ளார்.
Nanaynthara House: போயஸ் தோட்டத்தில் உள்ள லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வீட்டை பார்த்திருக்கீங்களா?