நடிகை நிரோஷா காவல் நிலையத்தில் கொடுத்த பரபரப்பு புகார்! என்ன ஆச்சு? அதிரடியாக நடிக்கும் விசாரணை!
பிரபல நடிகை நிரோஷா, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நிரோஷா. நடிகை ராதிகாவின் தங்கையான இவர், 1988 ஆம் ஆண்டு வெளியான 'அக்னி நட்சத்திரம்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சூரசம்காரம், செந்தூரப்பூவே, பார்வைகள் பலவிதம், பாண்டிய நாடு, தங்கம், உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். அக்கா ராதிகாவை போலவே திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் மொழி மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நிரோஷா. இவர் நடிகர் ராம்கியுடன் சில படங்கள் ஒன்றாக இணைந்து நடித்த போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் பின்னர் திருமணத்தில் முடிந்தது. நடிகர் ராம்கியை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிரோஷா, தற்போது வரை மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
அப்பத்தாவ போட்டு தள்ள தயாரான குணசேகரன்! 40 சதவீத ஷேர் யாருக்கு? அந்தர் பல்டி அடித்த பட்டம்மாள்!
நிரோஷா கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான, 'ராஜவம்சம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தன்னுடைய கணவர் ராம்கியுடன் வசித்து வரும் நிலையில், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தன்னுடைய வீட்டில் திருடு போய்விட்டதாக பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
Nanaynthara House: போயஸ் தோட்டத்தில் உள்ள லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வீட்டை பார்த்திருக்கீங்களா?
நிரோஷாவின் வீடு தேனாம்பேட்டையில் உள்ள ஜெமினி பாசன் என்கிற அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. இந்நிலையில் வீட்டில் இருந்த சொத்து ஆவணங்கள் திருடு போய்விட்டதாக, காவல் நிலையத்தில் நிரோஷா புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நிரோஷா மற்றும் ராம்கி ஆகியோருக்கு யார் மீது சந்தேகம் உள்ளது என்பது குறித்த தகவல்களையும் சேகரித்து, கடைசியாக இவர்கள் வீட்டிற்கு வந்து சென்றவர்கள் மற்றும் வேலைக்காரர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை செய்த பெண் ஒருவர் சுமார் 70 சவரன் வரை நகை திருடியது தெரிய வந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நடிகை ஷோபனா மற்றும் விஜய் யேசுதாஸ் மனைவி ஆகியோர் தங்களுடைய வீட்டில் நகை திருடு கூறி பரபரப்பை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.