- Home
- Cinema
- டிரெஸ்ஸே போடாமால் போஸ் கொடுத்து... மகளிர் தின வாழ்த்து சொன்ன ஆண்ட்ரியா - திட்டிதீர்க்கும் நெட்டிசன்கள்
டிரெஸ்ஸே போடாமால் போஸ் கொடுத்து... மகளிர் தின வாழ்த்து சொன்ன ஆண்ட்ரியா - திட்டிதீர்க்கும் நெட்டிசன்கள்
தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா, டிரெஸ்ஸே போடாமால் போஸ் கொடுத்து மகளிர் தின வாழ்த்து சொல்லியதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஆண்ட்ரியா. இதையடுத்து பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க வைத்தார் கவுதம் மேனன். தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், அஜித்தின் மங்காத்தா, கமல்ஹாசனுடன் விஸ்வரூபம், வெற்றிமாறனின் வடசென்னை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார் ஆண்ட்ரியா.
ஆண்ட்ரியா நடிகையாக மட்டுமின்றி புகழ் பெற்ற பாடகியாகவும் திகழ்ந்து வருகிறார். இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் பெரும்பாலும் சூப்பர் ஹிட் ஆனவை தான். குறிப்பாக கடைசியாக புஷ்பா படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஆண்ட்ரியா பாடிய ஊ சொல்றியா என்கிற பாடல் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனதோடு, சமூக வலைதளங்களிலும் செம்ம டிரெண்ட் ஆனது.
இதையும் படியுங்கள்... அட்ஜஸ்மெண்ட் பண்ண ரெடியானு போன் பண்ணி கேட்டாங்க... பகீர் தகவலை வெளியிட்ட ‘பாரதி கண்ணம்மா 2’ சீரியல் நடிகை
நடிகை ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கிய பிசாசு 2 படத்தில் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவித்து நடிகை ஆண்ட்ரியா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் தான் தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிரெஸ்ஸே போடாமல் போர்வையை உடம்பில் சுற்றிக்கொண்டு கண்ணாடி ஜன்னல் முன் போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள ஆண்ட்ரியா, “இன்றும், என்றென்றும் பெண்ணாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்” என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டு உள்ளார். அவரின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், டிரெஸ்ஸ போட்டுட்டே இதை சொல்லியிருக்கலாமே என கிண்டலடித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பெண்கள் தொட்டதில் வெல்லாத செயலே இல்லை - மகளிர் தின வாழ்த்து சொல்லி கமல் போட்ட நச் பதிவு வைரல்