பெண்கள் தொட்டதில் வெல்லாத செயலே இல்லை - மகளிர் தின வாழ்த்து சொல்லி கமல் போட்ட நச் பதிவு வைரல்
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டர் வாயிலாக மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பெண்களின் வளர்ச்சியையும், சாதனைகளையும் கொண்டாடும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. மகளிர் தினத்தை ஒட்டி பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டர் வாயிலாக மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “பெண்கள் தொடாத துறையே இல்லை; தொட்டதில் வெல்லாத செயலே இல்லையென யாவையுமாகி நிற்கும் பெண்கள் மேலும் உயர்ந்துகொண்டே செல்வர். இது நவயுக நியதி. மகளிர் நாள் வாழ்த்து” என கமல்ஹாசன் அந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
கமல்ஹாசனின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன. நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... International Women’s Day 2023: இந்தியாவின் டாப் 2 தொழில் முனைவோர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?