அட்ஜஸ்மெண்ட் பண்ண ரெடியானு போன் பண்ணி கேட்டாங்க... பகீர் தகவலை வெளியிட்ட ‘பாரதி கண்ணம்மா 2’ சீரியல் நடிகை
சீரியல்களில் நடக்கும் அட்ஜஸ்மெண்ட் விஷயங்கள் பற்றி பாரதி கண்ணம்மா 2 சீரியல் நடிகை வெளிப்படையாக பேசியுள்ளது சின்னத்திரை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவைப் போல் சின்னத்திரையிலும் மீடூ புகார் கொடுக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், பாரதி கண்ணம்மா 2 சீரியலில் மது என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா பிரசாத் என்பவர், சின்னத்திரையில் அட்ஜஸ்மெண்ட் பண்ண ஓகே வானு தன்னிடம் நேரடியாகவே சிலர் கேட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பேட்டியில் ரேஷ்மா கூறியதாவது : “சீரியலில் சின்ன சின்ன கேரக்டர் ரோலில் நடிக்க இருந்தாலும், அட்ஜஸ்மெண்ட் பண்ண ஓகேனா உங்களுக்கு இந்த ரோல் ஈஸியா கிடைக்கும்னு சொன்னாங்க. எல்லாருமே இதே தான் கேட்டாங்க. போங்கடா உங்களுக்கு வேற வேலையே இல்லையே, அட்ஜஸ்மெண்ட் பண்ணி தான் அந்த ரோல் எனக்கு கிடைக்கனும்னு அவசியமே இல்ல. வரம்போது வரட்டும் பாத்துக்குறேன்னு சொல்லிட்டு ஆடிஷன் போறதையே நிறுத்திட்டேன்.
இதையும் படியுங்கள்... தந்தை பாலியல் தொல்லை கொடுத்தார்னு சொன்னதற்காக... நான் வெட்கப்படவில்லை - நடிகை குஷ்பு பளீச் பேட்டி
நமக்கு அனுப்பப்படும் புரொபைலிலேயே அட்ஜஸ்மெண்ட்டுக்கு ஓகேவா, இல்லையானு கேட்டிருந்தாங்க. நான் அதற்கு நோ என்று டிக் செய்து அனுப்பி இருந்தேன். நான் நோ-னு குறிப்பிட்டு அனுப்பிய பின்னரும் அட்ஜஸ்மெண்ட் ஓகேவா உங்களுக்குனு போன் பண்ணிவேற கேட்டாங்க. இதெல்லாமே ஷாக்கிங்கா தான் இருந்தது” என அந்த பேட்டியில் பேசி இருந்தார் ரேஷ்மா.
நடிகை ரேஷ்மா பிரசாத் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் மது என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் இந்த தொடரின் நாயகன் பாரதிக்கு நெருங்கிய தோழியாக நடித்து வருவதால், அவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், சீரியல்களில் நடக்கும் அட்ஜஸ்மெண்ட் விஷயங்கள் பற்றி நடிகை ரேஷ்மா வெளிப்படையாக பேசியுள்ளது சின்னத்திரை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... ஹோம்லி லுக்கில் இருந்து கவர்ச்சிக்கு தாவிய சீரியல் நடிகை ஜனனி... படுக்கையறையில் நடத்திய படுகிளாமர் போட்டோஷூட்