தந்தை பாலியல் தொல்லை கொடுத்தார்னு சொன்னதற்காக... நான் வெட்கப்படவில்லை - நடிகை குஷ்பு பளீச் பேட்டி
தனக்கு 8 வயதாக இருந்தபோது தனது தந்தை தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக நடிகை குஷ்பு கடந்த சில தினங்களுக்கு முன் பரபரப்பு தகவலை வெளியிட்டிருந்தார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் தற்போது அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளில் இணைந்து பணியாற்றிய குஷ்பு அதன்பின் பாஜகவில் இணைந்தார். சமீபத்தில் அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி வழங்கப்பட்டது.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை குஷ்பு, தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து மனம்திறந்து பேசி இருந்தார். அதன்படி தனக்கு 8 வயதாக இருந்தபோது தனது தந்தை தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக பரபரப்பு தகவலை வெளியிட்டார். நடிகை குஷ்புவின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆனது.
இதையும் படியுங்கள்... ஹோம்லி லுக்கில் இருந்து கவர்ச்சிக்கு தாவிய சீரியல் நடிகை ஜனனி... படுக்கையறையில் நடத்திய படுகிளாமர் போட்டோஷூட்
இந்நிலையில், இந்த சம்பவத்தை வெளிப்படையாக சொன்னதற்காக தான் வெட்கப்படவில்லை என நடிகை குஷ்பு கூறி உள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது : “நான் ஒன்றும் திடுக்கென ஒரு அறிக்கையை வெளியிடவில்லையே. நேர்மையாக தான் நடந்ததை சொன்னேன். இதற்காக நான் வெட்கப்படவில்லை. ஏனெனில் எனக்கு நடந்ததை கூறினேன். குற்றம் செய்தவர் தான் வெட்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்.
மேலும் பெண்கள் தங்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக பேச வேண்டும் என கூறிய குஷ்பு, பெண்கள் வலிமை மிக்கவராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். எதுவாக இருந்தாலும் ஓப்பனாக பேசிவிட்டு தங்கள் பயணத்தை தொடர வேண்டும் என்பதே பெண்களுக்கு நான் சொல்லும் மெசேஜ்” என குஷ்பு சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... பெண்கள் தொட்டதில் வெல்லாத செயலே இல்லை - மகளிர் தின வாழ்த்து சொல்லி கமல் போட்ட நச் பதிவு வைரல்