எமி ஜாக்சனுக்கு 2வது குழந்தை பிறந்தாச்சு; அந்த க்யூட் பேபிக்கு இப்படி ஒரு பெயரா?
நடிகை எமி ஜாக்சன், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில், ஆண் குழந்தைக்கு தாயான தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

லண்டனைச் சேர்ந்தவர் நடிகை எமி ஜாக்சன். மாடலாக தன்னுடைய கேரியரை இளம் வயதிலேயே துவங்கிய எமி ஜாக்சன், இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான 'மதராசபட்டினம்' படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். பழைய சென்னையை மையமாக வைத்தும்... ஆங்கிலேயர்கள் ஆட்சியை மையப்படுத்தியும் வரலாற்று கதையாக எடுக்கப்பட்ட இந்த படத்தில், எமி ஜாக்சன் துரையம்மாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவருடைய கதாபாத்திரம் மற்றும் அழகு ரசிகர்களை இவருக்கு தமிழில் பல ரசிகர்களை உருவாக்கியது.
சிறந்த அறிமுகத்தை கொடுத்த மதராசபட்டினம்
'மதராசபட்டினம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, மற்ற தென்னிந்திய மொழிகளிலும் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் வந்தன. அதன்படி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வந்த எமி ஜாக்சன், தமிழில் தொடர்ந்து பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக அடுத்தடுத்த படங்களில் நடித்தார். குறிப்பாக தமிழில் இவர் நடித்த தாண்டவம், 2.0, தெறி, வேலையில்லா பட்டதாரி, போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
திருமணமான 3 மாதத்தில் 5 மாதம் கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன்? வைரலாகும் பிரக்னன்சி போட்டோஸ்!
மிஷன் சாப்டர் 1
இவர் நடிப்பில் கடைசியாக நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடித்து, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆக்சன் கதைகளத்தில் வெளியான 'மிஷன் சாப்டர் 1' திரைப்படம் வெளியானது. இதில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிப்பில் மட்டும் இன்றி ஆக்க்ஷனிலும் பின்னி பெடல் எடுத்திருந்தார். தமிழில் வாய்ப்புகள் கிடைத்த போதும் ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், மொத்தமாக தென் இந்தியா மொழி படங்களில் இருந்து விலகி ஹாலிவுட்டில் கவனம் செலுத்த துவங்கினார்.
2021-ஆம் ஆண்டு ஜார்ஜுடன் பிரேக்கப்
2015 ஆம் ஆண்டு முதல், ஜார்ஜ் என்பவரை காதலித்து அவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த எமி ஜாக்சன்... அவர் மூலம் கர்ப்பமாகி ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த பின்னர், அவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். 2021 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில் திருமணத்திற்கு முன்பே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். தற்போது எமி ஜாக்சனின் முதல் கணவரின் மகன் எமி ஜாக்சனுடன் தான் உள்ளார்.
காதலரை கரம்பிடித்த எமி ஜாக்சன்.. சிம்பிளாக நடந்த திருமணம் - லவ்லி கிளிக்ஸ் இதோ!
கடந்த ஆண்டு டிவி நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை எமி திருமணம் செய்தார்:
இதைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக எட் வெஸ்ட்விக் என்கிற ஹாலிவுட் டிவி நடிகருடன் எமி ஜாக்சன் டேட்டிங் செய்து வந்தார். அடிக்கடி அவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் வெளியிட்டார். இதை தொடர்ந்து எமி ஜாக்சனுக்கும் எட் வெஸ்ட்விக் ஆகியோருக்கு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்த நிலையில், தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்தார். எட் வெஸ்ட்விக் மூலம் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான எமி, பின்னரே அறிவித்தார்.
குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் வைத்த எமி ஜாக்சன்
இதைத் தொடர்ந்து தற்போது எமி ஜாக்சன் தன்னுடைய இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்து விட்டதாகவும், இரண்டாவதாக ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ள தகவலையும் அறிவித்து குழந்தைக்கு Oscar Alexander Westwick என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கணவர் மற்றும் குழந்தையோடு எமி ஜாக்சன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது (Amy Jackson and Ed Westwick blessed with a baby boy). ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை எமி ஜாக் ஜாக்சனுக்கு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.